அணியமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
அணியமங்கலம் சிவன்கோயில்,
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம் – 612804.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பழமையான கோயில் முற்றிலும் சிதைந்து விட புதிய கோயில் சிறியதாக எழும்பி உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில் ஒற்றை கருவறை சிவன் கோயிலாக உள்ளது. இறைவி சன்னதி இல்லை. கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு நந்தி உள்ளது. கருவறை கோட்டங்களில் மூர்த்திகளாக தென்முகன், துர்க்கை மட்டும் உள்ளனர். தென்கிழக்கில் ஆஞ்சநேயர் மண்டியிட்ட நிலையில் உள்ளார். இதன் காரணம் அறியமுடியவில்லை. பழம்கோயிலில் ஒரு திருமால் மூர்த்தம் இருந்தது அதன் எதிரில் இருந்த ஆஞ்சநேயரா என தெரியவில்லை, சண்டேசர் பழமையானவர். வடகிழக்கில் மேற்கு நோக்கிய சனிபகவானும் நவகிரகங்களும் உள்ளன. உடைந்த விநாயகர் திருமால், மற்றும் நந்தி ஒன்றும் வளாகத்தில் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அணியமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி