அகரவட்டாரம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில்
முகவரி
அகரவட்டாரம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், அகரவட்டாரம், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி
அறிமுகம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், அகரவட்டாரம் சிவன்கோயில் Agaravattaram sivan temple உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்உருவுகள்; உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்அருவுகள்; உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. இறைவன் உண்டென்று சொன்னால், நீங்கள் காண்கின்ற எல்லாமே அவன்தான்; இறைவன் இல்லையென்று சொன்னால், நீங்கள் காணாத எல்லாமே அவன்தான். உண்மை, இன்மை ஆகிய இவ்விரண்டு தன்மைகளோடு எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை பல உருவில் வணங்கி மகிழ்ந்தனர், இந்த பரத கண்டத்தில் லிங்க ரூபனாக வைத்து ஆகவிதிகள் வகுத்து அதன் படி வழிபட துவங்கினர் மக்கள். பிரபஞ்ச சக்திகளை ஈர்க்க கோயிலின் அளவுகளுக்கேற்ப குளங்கள் வெட்டப்பட்டு அவை கோயில்களின் மூர்த்திகளுக்கு சக்தியளிக்கும் கருவிகளாக ஆக்கிவைத்துள்ளனர். அதனால் இந்த குளங்களில் நீராடி அந்த கோயில் மூர்த்திகளை வழிபடும்போது முழுமையான இறை சக்தி நம்மை ஆட்கொள்கிறது. அப்படிப்பட்ட ஒரு சக்தி கேந்திரம் தான் இந்த அகர வட்டாரம். அகரம் என்பதற்கு மருதநில குடியிருப்பு என்றொரு பொருளுண்டு. அவ்வகையில் மருதநிலங்களின் மத்தியில் பெரியதொரு குளக்கரையில் உருவாக்கப்பட்ட கோயில் தான் இந்த காசிவிஸ்வநாதர் கோயில்.
புராண முக்கியத்துவம்
கோயிலின் காலம் 300ஆண்டுகளை கொண்டது எனலாம். இறைவன் காசி விஸ்வநாதர் மேற்கு நோக்கியும், இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர் மேற்கு நோக்கிய திருக்கோயில்கள் என்றுமே மிகுந்த சிறப்புடையவை, இறைவன் வரப்ரசாதி என கூறுவர் ஆனால் இக்கோயிலின் நிலையே இன்றைய நிலையே வேறு! . . சுவரின் செங்கற்களை காலம் கரைத்து விட்டது, விருட்சாசுரன் இறைவியின் சன்னதியை இடித்ததுடன் நிற்காமல் இறைவனின் கருவறையினையும் பிளக்க தயாராகிவிட்டான். இருசன்னதியையும் இணைக்கும் கூம்புவடிவ மண்டபம் பல கோடுகளாக பிளந்து நிற்கிறது. மழைக்கு கூட ஒதுங்க இயலாத நிலையில், மேலிருந்து நீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இறைவி தான் இருக்கும் சன்னதி பாதுகாப்பானதல்ல என எண்ணி இறைவனை நாடி அவர் சன்னதியிலேயே குடி வந்துவிட்டாள். விநாயகர் மட்டும் இதுவும் கடந்து போகும் என மழையில் நனைந்தவாறே சன்னதி வாயிலில் காத்திருக்கிறார். இறைவன் எதிரில் உள்ள நந்தியோ – உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் என்ற உறுதியுடன் விரிசல் விழுந்த கூம்பு வடிவ மண்டபத்தின் கீழ் உள்ளார். கோயிலின் எதிரில் உள்ள அரச மரத்தடியில் ஒரு லிங்கம் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளது. தென்முகன் தன் இருப்பிடத்தில் இருந்து சரிந்து விழும் நிலையில் உள்ளார். சண்டேசர் இறைவன் சன்னதியில் உள்ளதாக கூறுகின்றனர். திராவிட மாயையில் சிக்கி இறை வழிபாட்டை துறந்த இந்து சிறுபான்மையினர், முன்னோர்கள் போற்றி பாதுகாத்த கோயில்களை பராமரிக்க தவறினர். இப்படி சிதிலமடைந்த சிவன் கோயில்கள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று என சொல்வதை தவிர எனக்கு வேறு வார்த்தைகளில்லை. இக்கோயிலை கட்டித் தர வேண்டி இ.ச.அ.நி துறையினருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்று அப்பாவியாக சொல்லும் ஊர் மக்கள்.. அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
0