வீரசம்பனூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், திருவண்ணாமலை
முகவரி :
வீரசம்பனூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில்,
வீரசம்பனூர்
திருவண்ணாமலை மாவட்டம் – 606902.
தொடர்புக்கு: 90954 32704
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
பார்வதி தேவி
அறிமுகம்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் வழியில், சேத்துப்பட்டு வட்டம் தும்பூரை அடுத்துள்ளது வீரசம்பனூர். இந்த ஊரில் அன்னை பார்வதி தேவியுடன் பசுபதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளி உள்ளார் இறைவன். மகிமைமிக்க தேவிகாபுரத்துச் சிவாலயத்தைச் சுற்றிலும் 10 புகழ்பெற்ற சிவாலயங்கள் இருந்ததாகவும் அவற்றில் இந்த ஆலயமும் ஒன்று எனவும் சொல்கிறார்கள் ஊர் மக்கள். 32 சென்ட் அளவுக்குப் பிரமாண்டமாக இருந்த ஆலயம் இது. பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மற்றும் தாக்குதல்களால் சிதைவுற்றுக் கவனிப்பார் யாருமின்றிபோய் விட்டது என்கிறார்கள்.
ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் பேருந்தில் செல்லலாம். தும்பூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
தற்போது அந்த ஊராட்சித் தலைவரும் ஊர் மக்களும் இணைந்து ஆலயத்தைக் கட்டி வருகிறார்கள். ஆலயத்தைச் சுற்றிலும் பழங்கால கற்தூண்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. தேய்ந்து சிதைந்து போயுள்ளன. எவரோ சித்த புருஷர் ஒருவர் இங்கு ஜீவ சமாதி ஆனதாகவும், அவர் யாரென்று தற்போது வரை தெரியவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அந்த மகானின் சூட்சும சக்தியால் இங்கு வந்து வழிபடும் மக்களின் பல பிரச்னைகள் தீர்ந்துள்ளனவாம். இறையருளால் அந்தச் சித்தப் புருஷர் பற்றிய விவரமும் விரைவில் தெரிய வரும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.
இந்த ஊருக்கு அருகிலுள்ள தும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த சுவாமியைப் பற்றி கேள்விப்பட்டு வழிபட வந்தாராம். ஏறக்குறைய வழக்கு ஒன்றில் தோற்கும் நிலையிலிருந்த அவர், சுவாமியின் அருளால் மிக எளிதாக வெற்றி பெற்றாராம்!
தற்போது சுவாமியின் சந்நிதி, அம்பாள் சந்நிதி மட்டுமே எழும்பியுள்ளன. இன்னும் மகா மண்டபம், மதில், தரை வேலைகள், சிறிய சந்நிதிகள், உற்சவர் சிலைகள், வாகனங்கள் போன்ற பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் விவாசாயக் கூலி வேலை மட்டுமே செய்யும் எளிய மக்கள் வாழும் ஊர் இது. அவர்களால் முடிந்தவரை திருப்பணிகள் செய்துவிட்டார்கள். மீத வேலைகள் அப்படியே உள்ளன.
நம்பிக்கைகள்:
இந்த ஆலயத்தின் அம்பிகை கல்யாண வரம் அருளும் தேவியாக விளங்குகிறாள். பசுபதீஸ்வரரோ, சகல வரங்களையும் அருளும் வள்ளலாகவும் குறிப்பாக கால்நடை களின் நலம் காக்கும் தெய்வமாகவும் அருள்கிறார். இங்கு வந்து கடன் பிரச்னைகள், தோஷங்கள் போன்றவற்றிலிருந்து நிவர்த்தி பெற்றவர்கள் அநேகம். மட்டுமன்றி சட்ட ரீதியான பிரச்னைகள், சொத்து சம்பந்தமான வழக்குகளால் பாதிப்புற்றவர்களும் இங்கு வந்து வழிபட்டு வெற்றி பெற்றுள்ளனராம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தும்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி