வளசரவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப சீரடிசாய்பாபா கோயில், சென்னை
முகவரி :
ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா கோயில்,
வளசரவாக்கம்,
சென்னை மாவட்டம் – 600087.
இறைவன்:
விஸ்வரூப சீரடி சாய்பாபா
அறிமுகம்:
சென்னையில் எத்தனையோ சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது. அந்த வரிசையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம் சற்று தனித்துவம் கொண்டதாக காணப்படுகிறது. இந்த ஆலயத்துக்குள் சென்று வருவதற்கே பக்தர்கள் திணற வேண்டிய திருக்கும். வளசர வாக்கம் மேற்கு காம கோடி நகரில் வேலவன் தெருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
வெளியில் இருந்து பார்த்தாலே பாபா நம்மை உள்ளே அழைப்பது போன்று ஒரு உணர்வு தோன்றும். சினிமா படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த ஆலயத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரோ, “இந்த ஆலயத்தை நான் கட்டவில்லை. பாபாவே தனக்கான இந்த இடத்தை தேர்வு செய்து தானே கட்டிக்கொண்டுள்ளார்” என்றார். 2012-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மே மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பாபா சீரடியில் துவாரகமாயில் வசித்தபோது அவரால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா தீபம்தான் துனி என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்று துனியை இந்த ஆலயத்திலும் கட்ட ஒருவர் உதவி செய்தார். சீரடியில் பாபா ஏற்றி வைத்த அணையா தீபத்தில் இருந்து நெருப்பு எடுத்து வரப்பட்டு இங்கு துனி அமைக்கப்பட்டுள்ளது. சீரடியில் செய்யப்படுவது போன்றே இங்கு 4 நேர ஆரத்தி பாபாவுக்கு நடத்தப்படுகிறது. இதற்காக சீரடியில் இருந்து அர்ச்சகர்களையும் அழைத்து வந்துள்ளனர். சீரடியில் யுகாதி, ராமநவமி, குருபவுர்ணமி, விஜயதசமி, தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய 5 விழாக்களும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதே போன்று இங்கும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலை உயிரோட்டமானது. அதை நேரில் பார்த்து அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களுக்குதான் அந்த சிறப்பு தெரியும். இந்த ஆலயத்தில் பாபாவின் சிலை எப்படி அமைய வேண்டும் என்று அவரே எனக்கு கண்ணில் காட்டி இருந்தார். அதற்கேற்ப சிலைகள் ஜெய்ப்பூரில் இருப்பதாக கேள்வி பட்டேன். சிரித்த முகத்துடன் உட்கார்ந்த நிலையில் பாபா இருக்கும் சிலையை தேடினேன். நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூரில் இந்த சிலை கிடைத்தது. அதைத்தான் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளோம். மற்ற சிலைகள் அனைத்தும் பைபர் கிளாசால் செய்யப்பட்டவை.
ஒரு தடவை சினிமா கலை இயக்குனர் தோட்டாதரணி வந்திருந்தபோது பிரமாண்டமான பெருமாள் சிலை செய்ததாக கூறினார். உடனே நாங்கள் அதே போன்று பாபாவுக்கும் பெரிய சிலை செய்ய சொன்னோம். அதன்படி 9 அடியில் விஸ்வரூப பாபா சிலை செய்து இங்கு நிறுவப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்துக்கும் விஸ்வரூப சீரடி சாய்பாபா மந்திர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தோறும் இங்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் அன்று வந்து வழிபடுகிறார்கள்.
காலம்
2012
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வளசரவாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மாம்பலம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை