வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
முகவரி
வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் திருக்கோயில், வரிச்சியூர், குன்னத்தூர், மதுரை மாவட்டம் – 625020
இறைவன்
இறைவன்: உதயகிரீஸ்வரர்
அறிமுகம்
உதயகிரீஸ்வரர் சிவன் கோயில் மதுரை – சிவகங்கை ரோட்டில் வரிச்சியூர் அருகேயுள்ள மலை குன்று ஒன்றில் பாண்டிய மன்னர்களின் ஒருவரால் கட்டப்பட்டது. சென்னையிலிருந்து 444 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. மலையின் கிழக்குச் சரிவில் ஓர் குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை மட்டும் கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்கு சான்றாக விளங்குகிறது. ஊட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரிஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இவற்றின் காலமும் கி.பி 8-ஆம் நூற்றாண்டு ஆகும்.
புராண முக்கியத்துவம்
நாட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் என்று இக்கோயிலை கிழக்கு நோக்கி அமைத்தனர். அதனால், ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் பருவத்தில் உள்ள இளவரசர்கள் இக்கோயிலில் வழிபடுவது வழக்கம். இதே பகுதியில் மேற்கு நோக்கிய அஸ்தகிரீஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. ஆட்சி காலமும் முடியும் நிலையில் அதாவது அஸ்தமனம் ஆகும் நிலையில் உள்ள வயதான அரசர்கள் வழிபட இக்கோயில் குடையப்பட்டது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வரிச்சியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை