வயலூர் முத்துமாரியம்மன் கோயில் சிவனார், கடலூர்
முகவரி
வயலூர் முத்துமாரியம்மன் கோயில் சிவனார், வயலூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606003.
இறைவன்
இறைவன்: குபேரலிங்கம்
அறிமுகம்
விருத்தாசலம் கோயிலின் எட்டு திக்கிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் இருந்தன. விருத்தாசலத்தின் நேர் வடக்கில் ௨ / 2கிமி தூரத்தில் உள்ளது வயலூர் கிராமம், இது குபேரதிக்கு ஆகும். அதனால் இங்குள்ள இறைவனுக்கு குபேரலிங்கம் என பெயர். இந்த கோயிலை ஒட்டி கிழக்கில் செல்லும் தொடர்வண்டி பாதையை அருகில் உள்ள தரையடி சுரங்கப்பாதை வழி கடந்தால் அங்கே ஒரு உழைப்பாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கே பெரிய வேம்பின் கீழ் முத்துமாரியம்மன் குடியிருக்கிறார். இவருக்கு அமைக்கப்பட்ட ஆலயத்தினை ஒட்டி உள்ளது தான் இந்த சிவனார் இருப்பிடம். [இந்த லிங்கமூர்த்தியும் வயலூரில் இருக்கும் குபேரலிங்கமூர்த்தியும், தொடர்வண்டி பாதைக்காக அப்புறப்படுத்தப்பட்ட வயலூர் சிவன்கோயிலில் இருந்தவர்களே ஆவர்] வேப்பமரத்துக்கு உயர்ந்த ஒரு மேடை அமைத்து அதில் கிழக்கு நோக்கியபடி இந்த சிவனாரை இருத்தி உள்ளனர். இவரின் எதிரில் ஒரு அழகிய நந்தியும், பலிபீடமும் அமைத்துள்ளனர். வெயில், வெக்கை, புயல், மழை, தூவானம், பனி, இருள், தென்றல், நிலவொளி என அனைத்தும் கிடைக்கும் வெட்டவெளி என்றாலும், மாரியை வணங்குபவர்கள் அனைவரும் இவரையும் தவறாது வணங்கி செல்கின்றனர். விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தொடர் வண்டி மேம்பாலத்தினை ஏறிஇறங்கினால் உள்ளது வயலூர் கிராமம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வயலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி