வயலூர் கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
வயலூர் கைலாசநாதர் சிவன்கோயில், காத்தன்கடை, வயலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: திரிபுர சுந்தரி
அறிமுகம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காத்தன்கடை கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமையான இந்த சிவன் கோயில் முற்றிலும் சிதலமடைந்து காட்சியளிக்கிறது. மூலவரை கைலாசநாதர் என்றும் அம்பாளை திரிபுர சுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கோவிலில் புடைப்பு சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளது. கோவிலில் அதிஷ்டானம் இருந்ததாகவும் தற்சமயம் அதன்மேல் இருந்த சிவலிங்கத்தை இடம் மாற்றி வைத்துள்ளனர். மகா மண்டபத்தில் மேலே அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்துடன் இருப்பது மிக அற்புதமாகும். துவார கணபதி மற்றும் முருகன் அற்புதமாக ஒவ்வொரு சந்நிதியிலும் காட்சி கொடுக்கிறார்கள். இராஜகோபுரம் இல்லாவிட்டாலும் அதன் மொட்டை கோபுரமாக உள்ளது. இவைதவிர கோவிலுக்கு நுழையும் இடத்தில் ஓர் வரைபடம் கல்லில் உள்ளது. இந்த கோவிலுக்கு 1/2 கி.மீ நடந்து சென்றால் வேப்ப மர நிழலில் ஸ்வாமி உள்ளார். பிரதோஷம், சிவராத்திரி, பெளர்ணமி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காத்தன்கடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கல்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை