Friday Jan 10, 2025

வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர்திருக்கோயில் – கோயம்புத்தூர்

முகவரி

வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை , கோயம்புத்தூர் மாவட்டம்- 641017. போன்:+91- 94428 44884.

இறைவன்

இறைவன்: விருந்தீஸ்வரர் இறைவி: விஸ்வநாயகி அம்பாள்

அறிமுகம்

விருந்தீசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள, கோயம்புத்தூரில், அமைந்துள்ள சிவன் கோவில். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். அம்மன் விஸ்வநாயகி அம்பாள் (பார்வதி, தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் விரிந்த சடாமுடியுடன் நடன கோலத்தில் இருப்பார். இங்கு முடிந்த சடாமுடியுடனுள்ளார். சிவன் நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்ததாகவும் இதிலிருந்துதான் கோயில்களில் “அதிகார நந்தி’ சன்னதி அமைக்கும் பழக்கம் உண்டானதாகவும் மரபுசழிச் செய்தியுள்ளது கோவிலுக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் பெருமாளுக்கு ஒரு சிறிய தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் இது கட்டப்பட்டது என அறியவருகிறது.

புராண முக்கியத்துவம்

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி லிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது. தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது. இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் “விருந்தீஸ்வரர்’ ஆனார். அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார். தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும்.

நம்பிக்கைகள்

தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம்.

சிறப்பு அம்சங்கள்

ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார். ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் “அதிகார நந்தி’ சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

திருவிழாக்கள்

மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் விசேஷ நாட்கள் ஆகும்.

காலம்

7ஆம் நூற்றாண்டு கி.பி

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடமதுரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top