லக்குண்டி சந்திரமௌலீஷ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி :
லக்குண்டி சந்திரமௌலீஷ்வரர் கோயில்,
லக்குண்டி, கடக் நகர்,
கடக் மாவட்டம்,
கர்நாடகா 582115
இறைவன்:
சந்திரமௌலீஷ்வரர்
அறிமுகம்:
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகில் உள்ள லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சந்திரமௌலீஷ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் லிங்க வடிவில் சந்திரமௌலீஷ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு சிறிய கோவில் மற்றும் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கோயில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவில் கி.பி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. லக்குண்டியில் கட்டப்பட்ட 101 கோயில்களின் எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலை ஒட்டி ஒரு அழகான ஏரி உள்ளது. லக்குண்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
காலம்
கி.பி 11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லக்குண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடக்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹுப்லி