ரிஷியூர் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
ரிஷியூர் கைலாசநாதர் சிவன்கோயில், ரிஷியூர், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613703
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி : கற்பகவல்லி
அறிமுகம்
நீடாமங்கலத்தில் இருந்து கிழக்கில் செல்லும் சாலையில் இரு கிமி தூரம் சென்றால் முல்லைவாசல் அடுத்துள்ளது ரிஷியூர். சோழர்களின் பாம்பணி கூற்றத்தில் இருந்த ஊராகும் அக்காலத்தில் இவ்வூர் பிழிசூர் என அழைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் உள்ள சிவன்கோயில் இறைவன் திருஅகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டுள்ளார். பெரியநாயனார் என்ற இறை திருமேனியும், சரஸ்வதி இறைதிருமேனியும் இங்கு வழிபாட்டுக்காக எழுந்தருள வைக்கப்பட்டிருந்தன. விஸ்வநாத மகரிஷி வழிபட்டு பேறு பெற்ற தலமென்பதால் ரிஷியூர் ஆனது. கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளது கோயில், நுழைவாயில்நான்கு கால்கள் கொண்ட முகப்பு மண்டபமும் அதன் முன் ஒரு நந்தி மண்டபமும் உள்ளன. நாயக்கர் கால பாணியில் கட்டப்பட்ட கூம்பு வடிம மண்டபங்கள் கருவறை சுற்றி வர உள்ளது அதில் விநாயகர் விஸ்வநாத மகரிஷி வழிபட்ட லிங்கம், விசாலாட்சி முருகன் வள்ளி தேவானை அய்யனார், காளிகாம்பாள் சரஸ்வதி ஆகியோர் சன்னதிகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், பிச்சாடனர், ஊர்துதுவதாண்டவர், தென்முகன் அவரது அருகில் குலோத்துங்க சக்கரவர்த்தி திருமால் பிரம்மன் அகோர வீரபத்திரர், அர்த்தநாரீஸ்வரர், காயத்திரி தபசு சிற்பங்கள் கருவறை மாடங்களில் அணி சேர்க்கின்றன. இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கி உள்ளார். ஒரு கால பூஜை இக்கோயிலை நாட்களை கடத்த உதவுகிறது.
புராண முக்கியத்துவம்
பெரியநாச்சி எனப்படும் நாற்பத் தெண்ணாயிர மாணிக்கம் என்பவர் இக்கோயில் திருக்காளாஞ்சிக்காக 300காசுகள் கொடுத்துள்ள செய்தியையும் அறியமுடிகிறது. இவ்வூரில் சுந்தரபாண்டியன் வாய்க்கால் அருகில் பிள்ளையார்குண்டு என்ற நிலம் ஒன்றும் இருந்துள்ளது. இந்த கிராமத்தில் 1955ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது கிடையாது. இது ஊர் கட்டுப்பாடு. இதற்கு காரணம், 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ளதுபோல் குறுவை சாகுபடி கிடையாது. ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர். அப்போது தீபாவளி பண்டிகை நெருங்கியது. இதற்கு துணி, பலகாரம் வாங்க பணமின்றி விவசாயிகள் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடினர். பின்னர் கடனை அடைக்க முடியாமல் திணறினர். அன்றிலிருந்து தீபாவளி கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தீபாவளி தமிழர் திருநாள் இல்லை. தீபாவளி அன்று ஊர்க்கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்பட்டது. புதுமண தம்பதியரும் கூட தலை தீபாவளி கொண்டாடக் கூடாது. இங்கு பெண் கொடுத்தவர்களிடமிருந்து தீபாவளி சீரும் வாங்குவது கிடையாது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரிஷியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி