மேலப்பூண்டி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
மேலப்பூண்டி விஸ்வநாதர் சிவன்கோயில்,
மேலப்பூண்டி, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612804.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
வலங்கைமானின் மேற்கில் 4கிமீ தூரத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது சந்திரசேகரபுரம். இவ்வூரின் கிழக்கு பகுதி தான் மேலப்பூண்டி எனப்படுகிறது. சந்திரசேகரபுரத்தில் தான் சந்திரன் இறைவனை பூஜீத்து பழைய பொலிவு பெற்றார். “பூண்டி” என்ற சொல்லுக்கு “குடியிருக்குமிடம்” என்ற பொருள் உண்டு, இதனை நாம் இறைவன் குடியிருக்குமிடம் என கொள்ளலாம். சிறிய கிராமம், இங்கு இறைவன் விஸ்வநாதர் எனும் பெயரில் குடிகொண்டிருக்கிறார். இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளார். இரு கருவறைகளையும் ஐம்பது ஆண்டுகளின் முன்னம் ஒரு தகர கொட்டகை கொண்டு இணைத்துள்ளனர். முகப்பில் இறைவன் ரிஷபாரூடராக காட்சி தருகிறார்.
முகப்பு வாயிலில் சற்று பெரிய விநாயகரும் ஒருபுறம் தண்டபாணி முருகனும் உள்ளனர். உள்ளே சென்றால் இறைவனின் இருபுறமும் விநாயகரும் பாலசுப்ரமணியரும் உள்ளனர். கருவறை கோட்டங்களில் மூர்த்திகள் இல்லை, அவை உள்ளே இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன. சண்டேசர், தென்முகன் உட்புறம் ஒரு மேடை கட்டி வைத்துள்ளனர். பாதுகாப்பில்லை என இங்கேயே வைத்திருக்கலாம்!! பைரவர் சூரியன் சனீஸ்வரன் ஆகியோரும்,ஜோதிலிங்கம் மஹாலிங்கம், ஆத்மலிங்கம் என மூன்று லிங்க பாணங்கள் உள்ளே வைக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் பெரிய பிரகாரங்களில் இருந்திருக்கலாம்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலப்பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி