Thursday Jan 23, 2025

மஞ்சூர் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி

முகவரி

அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், குந்தா, மஞ்சூர், நீலகிரி மாவட்டம் – 643 219. போன்: +91- 423- 250 9353

இறைவன்

இறைவன்: தண்டாயுதபாணி சுவாமி

அறிமுகம்

கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு. இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

புராண முக்கியத்துவம்

30 வருடங்களுக்கு முன்பு குரு கிருஷ்ண நந்தாஜி என்பவர் இங்குள்ள காடுகளில் சுற்றித்திரிந்துவிட்டு இப்போதுள்ள மலைக்கு அருகில் உள்ள சிவன் குகைக்குள் சிலகாலம் கடும் தவம் மேற்கொண்டார். பின்பு அழகிய எழில் சூழ்ந்த அன்னமலைக் குன்றில் தண்டாயுதபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். நாளடைவில் முருகப்பெருமானின் அருள் பரவ, இக்கோயில் பிரபலமடையத் தொடங்கியது. அமைதியும் எழில் சூழ்ந்த மலைக்குன்றுகளும் அமைந்து காண்பவர் கண்களையும் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது.

நம்பிக்கைகள்

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மன அமைதி வேண்டியும், நோய் துன்பம் நீங்கவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாய செழிப்பு வேண்டியும், உணவுப்பஞ்சம் தீரவும் இத்தல முருகனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும் மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது. இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் (ஆண்டி அலங்காரம், சர்வ அலங்காரம், ராஜ அலங்காரம்… இன்னும் பிற) முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

திருவிழாக்கள்

சித்திரையில் காவடி பெருவிழா, ஆகஸ்ட்15 குரு ஜெயந்தி அன்று அன்னதானம், கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்கள்.

காலம்

1975 ஆம் ஆண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மஞ்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நீலகிரி

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top