Friday Dec 27, 2024

பீமாவரம் ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி

அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், வெளியகரம், பள்ளிப்பட்டு, பீமாவரம், ஆந்திரப்பிரதேசம் – 631207.

இறைவன்

இறைவன்: ஶ்ரீ சோமேஸ்வரர் இறைவி : ஶ்ரீ பார்வதிதேவி

அறிமுகம்

இந்த மகா புண்ணிய ஸ்தலம் ஆந்திரா மாநில பீமாவரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. அமலாபுரம் 65 கி..மீ. விஜயவாடா 122 கி.மி விசாகப்பட்டினம் 278 கி.மீ. . காக்கிநாடா 128 கி..மீ ராஜமுந்திரி 91 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உயர்ந்த கோபுரத்துடன் ஶ்ரீசோமேஸ்வர் ஆலயம் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடப்புறத்தில் ஶ்ரீசூரிய நாராயணர் சந்நிதியும் வலப்புறத்தில் ஶ்ரீசுப்ரமண்யர் சந்நிதியும் அமைந்துள்ளன. கருவறையில் வெண் ஸ்படிக லிங்கமாக ஶ்ரீசோமேஸ்வர் தரிசனம் தருகிறார். அமிர்த லிங்கத்தின் சிரசுப் பகுதியான லிங்கம் ஒன்றரை அடி உயரத்துடன் திகழ்கிறது. இந்த ஸ்படிக லிங்கத்தில் ஒவ்வொரு அமாவாசையில் கரும்புள்ளிகள் காணப்படுவதும் பௌர்ணமியில் கரும்புள்ளிகள் அகன்று வெண்ணிறத்தை அடைவதும் காலம் காலமாக நிகழும் விந்தை. கருவறைக்கு வெளியே இடப்புறத்தில் ஶ்ரீபார்வதிதேவியின் தனிச்சன்னதியில்அன்னை திவ்ய தரிசனம் தருகிறாள். பிரகாரத்தில் குமாரசுவாமி, சங்கு சக்ரதாரியாக க்ஷேத்ரபாலகர் ஜனார்த்தன சுவாமி அருள்புரிகிறார்கள். ஆலயத்தின் மேல் தளத்தில் ஶ்ரீஅன்னபூரணிதேவி வெள்ளிக் கலசம் துலங்கஅதியற்புதமாக தரிசனம் தருகிறாள்.

புராண முக்கியத்துவம்

சிவபக்தரான தாரகாசுரன் சிவனிடம் அருள்பெற்று ஆத்மலிங்கம் வேண்ட சிவனும் பாற்கடல் கடையும்போது வெளிப்படும் ஆத்மலிங்கம் உன்னிடம் வந்து சேர அருள்புரிந்தார். தாரகாசுரன் ஆத்மலிங்கம் பெற்றபின் ஆணவத்தில் தேவர்களை மீகவும் துன்புறுத்துவதோடு யாகங்களை களைத்து அக்கிரமம் அதிகம் புரிந்தான். பரந்தாமன் அவர்களிடம் சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் பிறக்கும் ஆறுமுகன் ஆத்மலிங்கத்தை தாரகாசுரனிடமிருந்து பிரித்து அருள்புரிவான் என கூறினார். ஶ்ரீ ஆறுமுகன் தாரகாசுரனிடம் போர்புரிந்து ஈசனை வணங்கி தன் சக்திவேலைஎறிய ஆத்மலிங்கத்தை சிதறடித்தது. தாரகாசுரனும் அழிந்தான். சிதறுண்ட ஆத்மலிங்கம் ஐந்து பாகங்களாக உடைந்து ஐந்து தலங்களில் விழுந்தது. அதில் ஒரு துண்டு விழுந்த இடம்தான் பீமாவரம் ஶ்ரீசந்திரன் பகவானால் பிரதிஷ்டை செய்த ஶ்ரீசோமேஸ்வர் அருள்புரிகிறார்.

நம்பிக்கைகள்

இந்த ஸ்தலத்து இறைவனை வணங்கி பொருள் இழந்து வாழ்க்கை வளம் குன்றியவர்கள் வசந்தம் அடைகிறார்கள் என்பது நம்பிக்கை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெளியகரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பீமாவரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top