பரிந்தல் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், கள்ளக்குறிச்சி
முகவரி
பரிந்தல் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், பரிந்தல், உளூந்தூர்ப்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606305.
இறைவன்
இறைவன்: ஸ்ரீநிவாசப்பெருமாள் இறைவி: புஷ்பவள்ளி, ஸ்ரீதேவி பூதேவி
அறிமுகம்
கள்ளக்குறிச்சி பைபாசில் கோட்டை என்னும் இடத்தைக் கடந்ததும் திரும்பும் சாலையில், 5 கிமீ பயணித்தால் பரிந்தலை அடையலாம். இவ்வூரில் ஸ்ரீதேவி பூதேவி சமதே ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 1910-ம் ஆண்டு குப்புசாமி செட்டியார் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கோவில் பழமை பூசிக்கொண்டிருக்கிறது.
புராண முக்கியத்துவம்
முதலில் சிறு தீபம் தெரிகிறது. பிறகு அதன் ஒளி பெருகி அந்த இடமே நன்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அது ஓர் ஆலயத்தின் கருவறை. சங்கு சக்கரதாரியாகப் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கிறார்கள். தொலைவில் யாரோ பல்லாண்டு பாடுகிறார்கள். அந்த ஓசை அந்தப் பிரதேசத்தையே வைகுண்டமாக மாற்றியிருக்கிறது. குப்புசாமிச் செட்டியாருக்கு மேனி சிலிர்த்தது. பெருமாளின் அழகுத் திருமேனியைக் கண் குளிரக் கண்டார். மனம் நிறைந்தது. அப்போது பெருமாள் திருமேனியில் சிறு அசைவு. குப்புசாமியால் நம்ப முடியவில்லை. மீண்டும் நன்கு உற்றுப் பார்த்தார். பெருமாளின் திருக்கரம் ஆசி வழங்குவதுபோல் மேலும் கீழுமாய் அசைய, திருவாய் மலர்வதும் தெரிந்தது. ‘பெருமாளே…’ என்று நா தழுக்கப் பணிகிறார் குப்புசாமிச் செட்டியார். ‘எனக்கு இந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் விக்ரகமாக மாறிப் புன்னகைத்து நின்றார் பெருமாள். அடுத்த கணம் உடல் அதிர விழிப்பு வந்துவிட்டது செட்டியாருக்கு. குப்புசாமிக்குக் கனவு என்று நம்பமுடியவில்லை. பெருமாள் தனக்குச் சொப்பனம் மூலம் இட்ட கட்டளை என்றே நினைத்தார். ஊர் மக்களை கேட்டுப் பெருமாளுக்கு ஒரு திருக்கோயிலை அந்தச் சிற்றூரிலேயே எடுக்க முடிவெடுத்தார். இது நிகழ்ந்தது 1910-ம் ஆண்டு.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரிந்தல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கள்ளக்குறிச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி