பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பரமந்தூர், புதுக்கோட்டை மாவட்டம் – 614 616.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர் அனைத்துக்கும் ஆதியான திருமால் இந்த ஊரில் ஆதிகேசவப்பெருமாள் அருள்பாலிக்கிறார். மிகப் பழமையான இந்த கோயில் 13-ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்புரிகிறார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள். மன்னர்கள் காலத்தில் பெரும் விழாக்களும் வழிபாடுகள் கோலாகலமாக ஆலயம் இது. தற்போது பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து விட்டது தற்போது கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. திருக்கோயிலின் இராஜகோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இராஜகோபுரம் மற்றும் மதில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இராமர் பூஜை செய்து வழிபட்ட ஆலயம் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது ஆதிகாலத்தில் பெரும் தவசீலர் ஆன பராசர மகரிஷி இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார் அவரின் பிரார்த்தனைக்கு ஏற்ப பெருமாள் அந்த மகரிஷிக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பது தலபுராணம். பெருமாள் மட்டுமல்ல இந்த கோயிலில் அருளும் மற்ற மூர்த்தி யாரும் சிறந்த வரப்பிரசாதி திகழ்கின்றனர் கோயிலில் தனிச் சந்நதியில் அருள்கிறார் பரிமளவல்லித் தாயார். இவரை தரிசித்து விட்டுதான் பெருமாளை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இவரை படிதாண்டா பத்தினி என போற்றுகிறார்கள். இங்கே இறக்கையுடன் திகழும் கருடாழ்வார் பெருமாள் சன்னதியை நோக்கியவண்ணம் அருள்கிறார். மகாமண்டபத்தில் ஸ்ரீ செல்வ வரதராஜ பெருமாள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம்மாழ்வார் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் விசேஷமானவர். வயதானவர் போன்ற தோற்றம் காட்டும் இந்த ஆஞ்சநேயர் கிழக்குப்பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப்பக்கம் தரிசித்தால் சிரித்த முகத்துடம் காட்சியளிப்பார்.
நம்பிக்கைகள்
இந்த பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் அருள்வதாக ஐதீகம் ஆகவே கல்யாண வரம் வேண்டும் என்பவர்கள் அன்பர்கள் இவரின் சன்னதிக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டி செல்கின்றனர் இந்த பெருமானின் திருவருளால் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை அதேபோல் குழந்தை வரம் வேண்டியும் வெகுநாட்களாக அவதிப்படும் அன்பர்கள் இந்த பெருமாளை வேண்டி வணங்கி செல்கின்றனர் இந்த கோயிலை தரிசித்து சென்றால் விரைவில் பிரச்சனைகள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள். பரிமளவள்ளி தாயாரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும் மங்கலம் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்
சிறப்பு அம்சங்கள்
இவர் நவபாஷாண திருமேனியர் என்கிறார்கள். மூலவருக்கு திருமஞ்சனம் ஏதும் கிடையாது. வருஷத்துக்கு ஒரு முறை பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும் 48 நாள் பெருமாள் திருமேனியை தரிசிக்க இயலாது. திருவடி மற்றும் திருமுக தரிசனம் மட்டுமே கிடைக்கும். அனுமன் தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பது போன்ற தருவது விசேஷ அம்சம் என்கிறார்கள்.
திருவிழாக்கள்
இந்த கோயிலில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் 7ஆம் நாள் திருவிழா நடைபெறுகிறது பெருமாள் வெள்ளை ஆற்றங்கரையில் எழுந்தருள்வார்
காலம்
13 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரமந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை