தேவன்குடி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
தேவன்குடி சிவன்கோயில்,
தேவன்குடி, நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613803.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
ராஜமன்னார்குடியின் வடக்கில் செல்லும் தேவன்குடி சாலையில் 9-கிமீ தூரம் சென்றால் தேவன்குடி உள்ளது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. தேவன்குடியில் ஒன்றும் இதை ஒட்டிய ஊரான புதுதேவன்குடியில் ஒன்றும் உள்ளன. புதுதேவன்குடி கோயில் சோழர்கள் காலத்தியது, உடையார் ராஜேந்திர சோழன் என குறிக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இப்போது நாம் காண்பது பிரதான சாலையை ஒட்டி உள்ள தேவன்குடி சிவன்கோயில் பழமையான ஆலயம் சிதைந்து போய் பலவருடங்களாகிறது, கடந்த சில வருடங்களாக பல சிரமங்களுக்கிடையே இக்கோயிலை ஊர் மக்கள் முற்றிலும் புதுப்பித்து கட்டியுள்ளனர். இறைவன் கிழக்கு நோக்கியவர் பெயர் தெரியவில்லை இறைவி தெற்கு நோக்கியுள்ளார் இவரின் பெயரும் எழுதப்படவில்லை. இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியில் நந்தி உள்ளார். வாயில் முகப்பில் பெரிய சிவனின் சிலை ஒன்றினை சுதைவடிவமாக செய்துள்ளனர். கோஷ்ட தெய்வங்கள் இல்லை, சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் ஒரு கிணறும், அருகில் பைரவர் சூரியன் சன்னதிகள் உள்ளன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவன்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம், திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி