திருவையாத்துகுடி சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
திருவையாத்துகுடி சிவன்கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614204.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
ஊத்துக்காடு அருகில் தான் இந்த திருவையாத்துகுடி உள்ளது. பாபநாசம்-வளத்தமங்கலம்-திருவையாத்துகுடி என நான்கு கி.மீ. தூரம் வரவேண்டும். இவ்வூரின் பெயர் திருவையாத்துகுடி என்றும் திருவையதுகுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது வைதும்பராயர்கள் உருவாக்கிய,அல்லது குடியிருந்த ஊர் என்பதால் வைதும்பராயர்கள்குடி என்று வந்ததாக கூறுகின்றனர். திரு என்ற அடைமொழி இருப்பதால் வையத்துள் சிறந்த ஊர் எனும் பொருளில் திரு/வையத்து/குடி என பெயரிடப்பட்டிருக்கலாம். சிறிய ஊர் தான், இங்கு சிவாலயம் இருந்து அழிந்துபட்டுள்ளது. இருந்த ஒரு லிங்கமூர்த்தியை கிழக்கு நோக்கி வைத்து சிறிய தகர கொட்டகை அமைத்துள்ளனர். இறைவனது ஆவுடையாரும் உடைந்த நிலையில் உள்ளது. விரும்புவோர் வந்து செல்கின்றனர். வையத்துள் சிறந்த ஊர் என மீண்டும் பெயர் வாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!! # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவையாத்துகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி