திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி சிவன் கோயில், தஞ்சாவூர்
முகவரி
திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி சிவன் கோயில் சின்ன ஆவுடையார் கோவில், அதிராமபட்டினம்-மணமேல்குடி , பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 723
இறைவன்
இறைவன்: ஆத்மநாதசுவாமி இறைவி : யோகாம்பாள்
அறிமுகம்
மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்து ஆட்கொண்டு திருவாசகம் பிறக்க காரணமாக இருந்த இடம் ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை.. அந்த திருநாமத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை யில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்…திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், அதே திருநாமத்தில் இங்கும் எழுந்தருளியுள்ளார்.. ஆலயம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து கீழே, விழும் நிலையில் உள்ளது. ஆத்மநாதசுவாமியோ வெளியில் ஒரு கொட்டகையில், ஒரு நேர பூஜை கூட இல்லாமல், தன்னிடம் திருவடி தீட்சை வாங்குவதற்கு மாணிக்கவாசகர் போல வேறு யாரும் வர மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கின்றார்…… பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்ன ஆவுடையார் கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பட்டுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி