திருநாதர் குன்று சமணக்கோயில், விழுப்புரம்
முகவரி
திருநாதர் குன்று சமணக்கோயில், சிங்கவரம், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604202
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கர்
அறிமுகம்
திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். செஞ்சியில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள மலை, இங்கு இருக்கும் ஒரு பெரிய பாறையில் 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளது, சமணம் தழைத்தோங்கிய தமிழகத்தில் 24 தீர்த்தங்கரர்களையும் ஒரே இடத்தில் இங்கு மட்டுமே காண முடிகிறது. முனிகள் வாசம் செய்த அந்த குகைகோவிலில் , பாறையின் நெற்றியில் இரண்டு அடுக்குகளாக 12 தீர்த்தங்கரர்களின் இரு தொகுப்பு சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பத்மாசன கோலத்தில் இருபுறமும் சாமரைகள் குறுக்கே பிணைக்கப்பட்டும் (வேறு இடங்களில் இந்த கலைஅம்சம் பின்பற்றபடவில்லை என தெரிகிறது) தலைக்கு மேல் அளவான புடைப்பில் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டு மிக அழகாக காட்சி தருகிறது. மேலும் அந்த அமைதியான சூழலில் பல முனிகள் அமர்ந்து தவம் செய்துள்ளதை தெளிவாக தெரிவிக்கிறது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், சந்திரநந்தி என்ற சமண துறவி 57 நாட்கள் கடவுளுக்கு உண்ணா நோன்பு இருந்து இந்த இடத்தில் தான் உயிரை விட்டுள்ளதாகவும், இளையபட்டாரா என்ற இன்னொரு சமண துறவி 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரை விட்டுள்ளார்.இங்கு சமணர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செஞ்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
செஞ்சி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி