தட்டாம்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
தட்டாம்பட்டு சிவன்கோயில், தட்டாம்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தட்டாம்பட்டு கிராமம். தட்டாம்பட்டு என்ற இக்கிராமத்தின் வடகிழக்கு மூலையில் முன்பு கற்கோயிலாக இருந்த சிவாலயம் முழுவதும் இடிந்து போன நிலையில் தற்போது எஞ்சி இருந்த இறை மூர்த்தங்களை எடுத்து வந்து ஒரு ஓலை குடிசையில் வைத்து உள்ளனர் கிராம மக்கள். இறைவனுக்கு இரு வேளை பூஜை நடைபெறுகிறது. நந்தியம்பெருமான், முருகன், அம்பாள் சிவலிங்கம், சண்டிகேஸ்வரர், மற்றும் ஒரு பாணம் ஆகிய இறை வடிவங்களை வரிசையாக வைத்துள்ளனர். பழைய திருக்குளம் அருகில் உள்ளது. தொடர்புக்கு திரு சங்கரவடிவு -9943876875, திரு ரகுநாதன்-9444878260, திரு ருக்மாங்கதன்-9443221893. இங்கிருந்து கூவத்தூர் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை பாண்டி ECR சாலையில் கூவத்தூரில் இறங்கி இங்கு வரலாம்..
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தட்டாம்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை