Monday Nov 25, 2024

சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பூர்

முகவரி

சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன் மலை, காங்கேயம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்-638701 தொலைபேசி: +91 4257- 220680, 220630

இறைவன்

இறைவன்: ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி இறைவி: வள்ளி, தெய்வானை

அறிமுகம்

இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலை 450 அடிச்சுவடுகள் அல்லது 2 கிமீ மலைப்பாதை வழியாக அடையலாம். மலைக்கோயில் முழுவதும் ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், பிரகாரம், கருவறை போன்ற கற்களால் கட்டப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராஜகோபுர மண்டபம் மற்றும் தீப ஸ்தம்பத்திற்கு முன்பாக அரச மற்றும் வேம்பு ஆகிய இரு மரங்களுக்கு நடுவே விநாயகப் பெருமான் இடம் பெற்றுள்ளார். கொடிமரமும் பலிபீடமும் கருவறையை நோக்கியவாறு காணப்படுகின்றன. மூலவர் வெண்ணீஸ்வரர் / நஞ்சுண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவன் சுயம்பு மூர்த்தி மற்றும் அவர் கருவறையில் வீற்றிருக்கிறார். அன்னை பர்வத வர்த்தினி / லோகநாயகி என்று அழைக்கப்படுகிறார். கோயிலில் அழகிய சிற்பங்களும் தூண்களும் உள்ளன. இசைத் தூண்களும் உள்ளன. முதலை உண்ட சிறுவனைத் துப்பச் சுந்தரர் செய்த அவிநாசியின் புராணக்கதையைக் காட்டும் சிற்பம் மிகவும் தத்ரூபமாக உள்ளது. மேலும், நுழைவாயிலில் உள்ள யானை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மூலஸ்தானம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் சன்னதியே பிரசித்தி பெற்றது. அவர் சுப்ரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அவர் துணைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் இருக்கிறார். நான்கு கைகளுடனும், ஒற்றை முகத்துடனும் மயிலின் மீது அமர்ந்திருக்கிறார். பொதுவாக, முதல் பூஜை விநாயகருக்கு செய்யப்படும் ஆனால் இங்கு முதல் பூஜை முருகப் பெருமானுக்கு செய்யப்படுகிறது, மேலும் விநாயகரே இங்கு முருகப்பெருமானை வழிபட்டதாகக் கருதப்படுகிறது. இங்கு கடவுளுக்கு வெண்ணெய் மற்றும் தயிர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. உற்சவர் வள்ளி, தெய்வயானையுடன் சுப்பிரமணியர். இக்கோயில் 1000-2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. தல விருட்சம் : தொரட்டி மரம் (இரண்டு மரங்கள் பிணைந்த நிலையில் உள்ளது) தீர்த்தம் : காசி தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்லை. அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேயநாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள் காணப்படுகிறது. சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து, மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நுõற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நுõலை இயற்சிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர் அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணி கலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரவீர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேகய நாட்டில் விழுந்தது சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம் ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்ணீ வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரவீராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

வேண்டியவருக்கு வேண்டியதை வழங்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குவதால் பக்தர்கள் அதிகமானோர் வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்துனை பிரச்சனைகள் இருந்தாலும், விடுபடலாம் என்ற ஐதீகம் உள்ளது. சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். நேர்த்திக்கடன்: இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன் அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்கின்றனர். கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும், வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும், வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளது.அனைத்து நோய்களும், பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும், சித்தர்கள் பலர் தவமிருந்த மலை; இன்றும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது. கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி : சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர்ணீவைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.

திருவிழாக்கள்

ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா 16 நாட்கள் சிறப்பாக நடந்து வருகிறது. அதோடு, தமிழ்வருட பிறப்பான சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், அடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாத சிறப்பு பூஜைகள், திருவாதிரை, தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், மற்றும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என ஆண்டு முழுவதும் சிறப்பான திருவிழாக்கள் சிவன் மலையில் நடந்து வருகிறது. தினமும் ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. விழாப்பூஜை : காலை 6.00 மணி; காலசந்தி : காலை 9.00 மணி; உச்சி காலம் : மதியம் 12.00; சாயரட்சை மாலை 6.00 மணி; அர்த்தசாமம் இரவு 8.00 மணி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிவன்மலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top