சிதம்பரம் இந்திரலிங்கம் திருக்கோயில், கடலூர்
முகவரி
இந்திரலிங்கம் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்
இறைவன்: இந்திரலிங்கமூர்த்தி
அறிமுகம்
பெருங்கோயில்கள் ஒவ்வொன்றும் நான்கு திசைகளிலும் அல்லது எட்டு திசைகளிலும் கோயில்களுடன் அமைந்திருக்கும். சிதம்பரம் கோயில் முப்பத்துஇரண்டு திக்கு நிலைகோயில்கள் கொண்டு விளங்கியது. காலச்சக்கர சுழற்சியில் மீதமிருப்பவை சிலவே. முதலில் கிழக்கு பகுதியான இந்திர திக்கில் அமைந்துள்ளது இந்த இந்திரலிங்கம். தில்லை பெருங்கோயிலின் கிழக்கு வீதியில் தேர்முட்டி என அழைக்கப்படும் இடத்தில் உள்ள விநாயகர் தேர் நிறுத்தம் அருகில் மேற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார் இந்த இந்திரலிங்கமூர்த்தி. சூரியோதயத்திற்கு பெயர் பெற்ற கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன் என்பதால் இந்திரலிங்கமூர்த்தி. நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி, சமீபத்தில் திருப்பணிகள் பெற்று அழகுடன் உள்ளது, கருவறை மற்றும் முகப்பு மண்டபத்துடன் உள்ளது. முகப்பு மண்டபத்தின் மேல் இந்திரன் இறைவனை வணங்குவதுபோல் சுதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திர திக்கு இறைவனை நினைத்து வேண்டிக்கொண்டால், சகல வளமும் நலமும் கிடைக்கப் பெறலாம். நோய் நொடியில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம். தீராத நோயையும் தீர்த்துவைப்பார். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி