கோமல் கோமுக்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கோமல் கோமுக்தீஸ்வரர் சிவன்கோயில்,
கோமல், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
கோமுக்தீஸ்வரர்
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 14வது கிமீ ல் உள்ளது கோமல் எனும் சிற்றூர் நிறுத்தம், இங்கிருந்து ஊர் கிழக்கில் அரை கிமீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒரு கோமல் உள்ளது. வெள்ளியாற்றின் மேற்கு கரையில் உள்ளது இந்த கிராமம். பெரிய குளத்தின் கரையில் ஒரு சிவாலயமும் ஒரு வைணவ ஆலயமும் உள்ளன. கோ எனப்படும் காமதேனுவுக்கு நற்பேறு அளித்த தலம் என்பதால் கோ மங்கலம் எனப்பட்டு இப்போது கோமல் ஆகியுள்ளது. கோ-விற்கு முக்தியளித்த்தால் இங்கே இறைவன் பெயரும் இங்கே கோமுக்தீஸ்வரர் எனப்படுகிறார். அது மட்டுமல்லாது சப்த கன்னியரும் இங்கே வழிபட்டு அருள் பெற்ற தலம் இதுவாகும்.
நாற்பது ஆண்டுகளினின் முன்னம் ஒரு விவசாயி தனது நிலத்தில் கிணறு தோண்டும்போது கிணற்றில் இருந்து வெளிப்பட்ட லிங்க மூர்த்தி இவர் என்கின்றனர். பல காலம் லிங்க மூர்த்தி ஒரு கீற்று கொட்டகையில் இருந்தார். தற்போது அனைவரது முயற்சியாலும் இறைவன் இறைவிக்கு சிறிய கோயில் ஒன்றினை எழுப்பி உள்ளனர். கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை வாயிலில் சித்தி விநாயகர் என ஒரு விநாயகரும் பாலமுருகனும் உள்ளனர். வடகிழக்கு பகுதியில் நவகிரகம், சற்று உயரமான மேடையில் மூன்று அளவுகளில் மூன்று பிள்ளையார்கள் அழகாய் அமர்ந்திருக்கின்றனர். இறைவன் எதிரில் ஒன்றன் பின் ஒன்றாய் இரு நந்திகள் உள்ளன. அனைத்து மூர்த்திகளும் சிறிய இடத்திலேயே வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. காமதேனு வழிபட்ட இறைவனை வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வ நிலை உயரும். விவசாயம் செழிக்க, பால் பொருள் வியாபாரம் செய்வோர் இந்த மூர்த்தியை வணங்கி பலன் பெறலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி