கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயில், தஞ்சாவூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/316959740_8357117597694610_5205897348825208441_n.jpg)
முகவரி :
காசிவிஸ்வநாதர் கோயில்,
கும்பகோணம் கல்யாணராமன் தெரு,
தஞ்சாவூர் மாவட்டம் – 612001.
இறைவன்:
சபரிவார விஸ்வநாதர், காசிவிஸ்வநாதர்
அறிமுகம்:
கும்பகோணத்தில் ஓடும் காவிரியின் தென் கரையில் கல்யாணராமன்தெரு என ஒன்றுண்டு பாலக்கரை பழைய பாலம் ஒட்டித்தான் இந்த தெரு உள்ளது. அதில் இரண்டு விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன. முதல் கோயில் சபரிவார விஸ்வநாதர் என்றும், அடுத்துள்ளது காசி விஸ்வநாதர் எனவும் உள்ளது. இந்த காசி விஸ்வநாதர் மேற்கு நோக்கிய கருவறை கொண்டு காவிரிகரையிலேயே உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார். மூர்த்திகள் சிறியனவாக இருந்தாலும் கீர்த்தி மிக்கவை. கருவறையின் நேர் எதிரில் பெரிய அரச மரம் ஒன்று நிற்கிறது படித்துறையும் உள்ளது. அதனடியில் சில நாகர்களும் உள்ளனர். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி அவரது கருவறை வாயிலில் விநாயகர் முருகனும் உள்ளனர். நந்தி எதிரில் உள்ளார். நவகிரகங்கள் மற்றும் பைரவரும் பின் சுற்றில் உள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/316270594_8357117681027935_4451543193434818493_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/316293913_8357118017694568_8595111115614055109_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/316959740_8357117597694610_5205897348825208441_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317433007_8357117784361258_6420350850858254082_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317847966_8357118021027901_6253342865692911984_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி