காஞ்சிபுரம் கச்சி மயானேஸ்வரர் திருக்கோயில்
முகவரி
காஞ்சிபுரம் கச்சி மயானேஸ்வரர் திருக்கோயில், ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் – 631502.
இறைவன்
இறைவன்: கச்சி மயானேஸ்வரர்
அறிமுகம்
காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலின் கொடிக்கம்பத்தினை அடுத்து வலப்பால் உள்ள தனிக்கோயில். காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் (கச்சி மயானம்) என அறியப்பட்ட இது, தேவார வைப்புத்தலமாகும். மற்றும், காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாக உள்ள இவ்விறைவரை மயான லிங்கேசர் எனும் பெயராலும் அழைக்கப்படுகிறது. மேலும், பண்டாசுரனை அழிக்க வேள்வி செய்த அத்தீக்குண்டமே தற்போது கோயிலுள் இருக்கும் சிவகங்கைத் தீர்த்தமாக உள்ளது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது
புராண முக்கியத்துவம்
முன்பொருமுறை பண்டாசுரன் பிரமன், திருமால் மற்றுமுள்ள தேவர்கள் அனைவருடைய உடலுள் புகுந்துகொண்டு, அவர்களுடைய வீரியத்தைக் கவர்ந்து கொண்டு அவர்களை வலிமையிழக்கச் செய்தான். இதனால் பண்டாசுரனை ஒடுக்க எண்ணிய இறைவன் காஞ்சியில் சோதிபிழம்பாய்த் தோன்றி, குண்டமமைத்து நெய்யை நிரப்பி, தத்துவங்களைத் தருப்பையாகவும், முக்குணங்களை வேதிகைகளாகவும் கொண்டு அம்பிகையோடு வேள்வி செய்தார். இவ்வேள்வியில் பிரமன் முதலான அனைத்து உயிர்களையும் இட்டார்; அனைத்து உயிர்களும் தீயில் ஒடுங்கின. அப்போது பண்டாசுரன் எதிரே வந்து நிற்க, அவனையும் தீயிலிட்டார். பின் அத்தீயானது இலிங்க வடிவமாகி ‘மயானலிங்கம்’ என வழங்களாயிற்று. என்பது இத்தல வரலாறு. கச்சிமயானத்தினைத் தனியே வலம் வரலாம். கருவறை வெளிச்சுவரில் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், நர்த்தன விநாயகர் திருமேனிகள் உள்ளன. சன்னதிக்குள் சிவலிங்க மூர்த்தம் மட்டுந்தான் எதிரில் நந்தியுடன் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை