கரம்பத்தூர் விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கரம்பத்தூர் விஸ்வநாதர் சிவன்கோயில்,
கரம்பத்தூர், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614301.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் திருக்கருகாவூர் தாண்டியதும் வலது புறம் செல்லும் சிறிய சாலையில் சென்றால் கரம்பத்தூர் உள்ளது. பாபநாசத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சிறிய அழகிய நெல்வயல் சூழ்ந்த கிராமம், ஊரின் முகப்பில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கீழ் கரையில் அய்யனார் கோயில் உள்ளது. மேல்கரையில் மிகபெரிய ஒரு அரசமரத்தின் அருகில் கோயில் கொண்டுள்ளார் இறைவன். கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை தெற்கு நோக்கிய அம்பிகையின் கருவறை இரு சன்னதிகளையும் ஒரு கூம்புவடிவ மண்டபம் இணைக்கிறது. அதன் வெளியில் இறைவனை நோக்கிய நந்தி மண்டபம் நான்கு கருங்கல் தூண்களில் உள்ளது.
இறைவன்-விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி பிரகாரசுற்றில் தென்முகன் உள்ளார் அதுபோல் துர்க்கையும் உள்ளார். சிறிய விநாயகர் சன்னதி உள்ளது. வடக்கில் துர்க்கையின் எதிரில் ஒரு பெரிய வில்வ மரம் காய்த்து கொட்டுகிறது. அதனடியில் அழகான வேலைப்பாடு கொண்ட ஒரு உடைந்த பைரவரும், ஒரு லிங்க பாணம் ஒன்றும் துர்க்கை சிலை ஒன்றும் உள்ளது. வெளியில் சண்டேசர் சன்னதி இல்லை. வடகிழக்கில் நவகிரக மேடை உள்ளது. சுற்றிலும் சிமென்ட் பலகை சுவர் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கரம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி