ஒக்கூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஒக்கூர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
ஒக்கூர், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – (கங்களாஞ்சேரி வழி) நாகூர் சாலையில் 15 கிமீ தூரம் வந்தால் ஒக்கூர் சாலை பிரிவு உள்ளது அங்கிருந்து தெற்கில் செல்லும் சிறிய சாலையில் ½ கிமீ பயணித்தால் ஒக்கூர் கிராமம். சிறிய ஊர் தான், இரண்டு மூன்று தெருக்களே உள்ளன. இங்கு பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கம்பீரமான தேர் போல ஒரு பெருமாள் கோயில் ஒன்று நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. அப்போ நாம் காண வந்த சிவன்கோயில் எங்குள்ளது என கேட்கிறீர்களா? அது எப்போது காணமல் போனது என யாருக்கும் தெரியாது.
கிடைத்த மூர்த்திகளை யாரோ சில நல்லவர்கள் இந்த கோயில் வாயிலில் வைத்து விட்டு சென்றுள்ளனர். வாள்முனையில் அன்று இந்து தர்மத்தை அழிக்க நினைத்து கோயில்களை அழித்தனர், இன்று வாய் பேச்சால் சனாதனதர்மத்தை ஒழிப்போம் என மீதமிருக்கும் கோயில்களையும் அழித்து வருகின்றனர். இப்படித்தான் ஆங்காங்கே சிதைவடைந்த கோயில்கள் உருவாகின, வழிபாடற்ற மூர்த்திகள் வந்தன. அதில் ஒன்று தான் ஒக்கூர்.
பெருமாள் கோயிலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை, செடிகள் முளைத்து சிதைவு ஆரம்பித்துள்ளது. அழகிய பெருமாளும், அவரது துணைவியார் பூதேவி ஸ்ரீதேவி சமேதராக உள்ளார். நமது சிவாலய மூர்த்திகளான பெரிய லிங்க மூர்த்தி இக்கோயிலின் படிக்கட்டுகள் ஓரம் வைக்கப்பட்டு உள்ளார், அருகில் ஒரு லிங்க பாணன், ஒரு அழகிய பைரவமூர்த்தி, சற்றே உடைந்த ஒரு நந்தி இவ்வளவுதான். சிவன்கோயிலை பார்க்கும் ஆர்வத்தில் வந்த நான் பெருமாளுக்கும் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விட்டு வந்தேன்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி