அருள்மிகு ஸ்ரீ மழுஆயுத நாதர் உடனுறை சீதலாம்பிகை திருகோயில், மழுவங்கரணை
முகவரி
அருள்மிகு ஸ்ரீ மழுஆயுத நாதர் உடனுறை சீதலாம்பிகை திருகோயில், மழுவங்கரணை, சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 309.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ மழுஆயுத நாதர் இறைவி : சீதலாம்பிகை
அறிமுகம்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் வட்டம் மழுவங்கரணை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. மேல்மருவத்தூரீல் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில். சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவாலயம் மிகவும் சிதலமடைந்த நிலையிலுள்ளது. முந்தைய காலத்தில் பெரும் புகழயோடு இருந்த கோவில் தற்போது யாரும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது. கோவிலை சுற்றி மரங்கள், செடிகள் என புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. காலத்தின் மாற்றத்தினால் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. கோவில் கோபுரம் முற்றிலும் சிதைந்த விட்ட நிலையில் சிவன் வெட்டவெளியில் உள்ளார். மூலவரை ஸ்ரீ மழுஆயுத நாதர் என்றும் இறைவியை சீதலாம்பிகை என்றும் மக்கள் அழைக்கின்றார்கள். தற்போது பிரதோஷ பூஜை மற்றும் பௌர்ணமி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மழுவங்கரணை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை