அருள்மிகு விராட் அம்பிகா தேவி சக்திப்பீடக் கோவில், இராஜஸ்தான்
முகவரி
அருள்மிகு விராட் அம்பிகா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் விராட் நகர், பரத்பூர் இராஜஸ்தான் – 303102
இறைவன்
சக்தி: அம்பிகா பைரவர்: அம்ரிதேஸ்வர் , உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கால் விரல்கள்
அறிமுகம்
இந்தியாவின் இராஜஸ்தானில் பரத்பூரில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் விராட் சக்தி பீடக்கோயிலும் ஒன்றாகும். உள்ளூர் மக்கள் அம்பிகா என்ற பெயருடன் தேவியை அழைக்கிறார்கள். பண்டைய நூல்களின் ஆராய்ச்சியின் படி, சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடம் (பீதஸ்தான்) பூமியில் மூன்று இடங்களைக் காட்டுகிறது. ஆனால் இரண்டு இடங்களில் (மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம்) எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய தகவல்களின்படி, தேவியையும் சன்னதியையும் காணக்கூடிய ஒரே இடம் பரத்பூர் தான். மேலும், தேவியின் சக்திப்பீடம் இதுதான் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். பல ஆண்டுகளாக தேவியை அம்பிகா என்றும் சிவபெருமானை “அமிர்தேஸ்வர்” என்றும் வழிபடப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது கால் விரல்கள் இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
நவராத்திரி ஒரு வருடத்தில் இரண்டு முறை அதாவது ஏப்ரல் (சித்திரை மாதம்) மற்றும் செப்டம்பர்-அக்டோபர் (அஸ்விஜா மாதம்) ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்படுகின்றன. கொண்டாடப்படும் பிற திருவிழாக்கள் மகர சங்கராந்தி, சிவராத்திரி, ராம் நவமி, ஷரத்பூர்ணிமா, தீஜ் (ஜூலை- ஆகஸ்ட்), கங்கூர் (மார்ச்-ஏப்ரல்) மற்றும் தீபாவளி.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரத்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பரத்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஜெய்ப்பூர்