அருள்மிகு கோதண்டராமர் கோவில்- புதுச்சேரி
முகவரி
அருள்மிகு கோதண்டராமர் கோவில் 7 வது குறுக்கு செயின்ட், மேரி ஓல்கரெட், புதுச்சேரி, 605110
இறைவன்
இறைவன்: கோதண்டராமர்
அறிமுகம்
நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், முகலாயர்-ஐரோப்பியர் நடத்திய போர்களில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர். 1860ல் பலியா என்ற ஜைன அதிகாரி மற்றும் சென்னை மாகாண அரசு உறுப்பினர், செஞ்சியிலிருந்து சித்தாமீர் என்ற இடத்திற்கு நிறைய சிற்பங்களையும், கற்தூண்கள் முதலியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். ஆங்கிலேயர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. 1858ல் ஆர்க்காடு கலெக்டர், ஸ்ரீ பட்டாபி ராமஸ்வாமி கோவிலின் அழகுமிகு தூண்களை . சிலையின் பீடத்துக்குக் கீழ் வைக்க “ஐடியா” கொடுத்தார். (அதாவது கோவில் தூண்களை அந்த அளவிற்கு இழிவு படுத்தவேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்). இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கடரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
புராண முக்கியத்துவம்
செஞ்சியின் கடந்த 500-600 வருட கால சரித்திரம், அந்நிலையை அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன. 15ம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர்கள் செஞ்சியின் முன்னேற்றத்திற்கு பல காரியங்களை செய்துள்ளனர். ஆனால், 1564ல் முகமதியர்களால் விஜயநகர ராஜா விரட்டப்பட்டு, செஞ்சி ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன, இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. 1712ல் செஞ்சி ராஜாவிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது. 1721ல் ராஜா தேசிங் கப்பம் கட்டாததால் ஆர்காட் நவாப் படையெடுத்தான். சதத்துல்லா என்பவனின் கீழ் முகமதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் கொல்லப்பட்டான். தேசிங்குவின் பெயர் தேஜ் சிங் என்பதாகும். ராஜஸ்தான் கவர்னர், சவரூப் சிங் என்பவரின் மகன். ராஜா தேசிங்கின் உடல் செட்டிக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. ஆனால் அது 1878லேயே காணவில்லை என்று ஆர்காடு கெசட்டியர் குறிப்பிடுகிறது. 1749ல் அன்வருத்தூன் ஆம்பூர் போரில் கொல்லப்பட்டவுடன், முறைதவறிய வழியில் பிறந்தவனான முஹம்மது அலி செஞ்சியைப்பிடித்துக் கொண்டான். பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகிப் (முகலாயர்களும்) சேந்து கொண்டு, கோவில்கள் தாக்கப்படக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் சம்பாதித்தனர்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி