அரநெறி அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அரநெறி அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில், அரநெறி, ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 602105.
இறைவன்
இறைவன்: அர்த்தநாரீஸ்வரர்
அறிமுகம்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது அரநெறி கிராமம். ஸ்ரீபெரும்பத்தூருக்கு அருகில் உள்ளது. மாம்பாக்கத்திலிருந்து இடதுபக்கமாகவும் ஒரகடகத்திலிருந்து இடதுபக்கம் வந்து வலது பக்கம் திரும்பி 4கி.மீ சென்றால் இக்கோவிலை அடையலாம். கோவில் முற்றிலும் சிதிலமடைந்து மரம் முழுவதும் கோவிலை ஆக்கிரமித்துள்ளது. ஒருக்காலத்தில் பெரியகோவிலாக இருந்து தற்போது கருவறை மட்டுமே மிஞ்சியுள்ளது. இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கருவறைக்கு வெளியே விநாயகர் மூலையில் உள்ளார். வெட்டவெளியில் நந்தி கோவிலுக்கு வெளியே அமர்ந்துள்ளார். செங்கல் கற்றளியாக உள்ள இந்தகோவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரநெறி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை