அய்யாவாடி நத்தம் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
அய்யாவாடி நத்தம் சிவன்கோயில்,
அய்யாவாடி, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612204.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்யங்கிராதான். இவள் பத்ரகாளியின் அம்சம். இந்த பிரத்யங்கிரா தேவிக்கான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து கிழக்கில் உள்ள பாடல்பெற்ற தலமான திருநாகேஸ்வரம் வந்து அதன் தெற்கில் ஓடும் கீர்த்திமான் ஆற்றினை கடந்தால் அய்யாவாடி. பஞ்ச பாண்டவர்கள் இத்தலம் வந்து இந்த தேவியை பூஜித்து அருள் பெற்றதால் ஐவர் பாடி என பெயர். தற்போது அய்யாவாடி எனப்படுகிறது. பிரதானசாலையின் வலதுபுறம் பிரித்யங்கரா கோயிலும், அடுத்த வளைவில் முதல் இடது திரும்பி நேராக சென்றால் ஒரு குளத்தின் கரையில் ஒரு பெரிய அரசமரத்தின் கீழ் ஒரு தகர கொட்டகையில் உள்ளது ஒரு பாண லிங்கம். இதற்க்கு கோயில் எழுப்ப எண்ணி ஆவுடையார் மற்றும் அம்பிகை சிலையும் ரிஷப சிலையும் தயாராகி ஒரு தொட்டியில் ஜலவாசமாக வைக்கப்பட்டுள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அய்யாவாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி