அனக்குடி சோமநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
அனக்குடி சோமநாதர் சிவன்கோயில்,
அனக்குடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
சோமசுந்தரி
அறிமுகம்:
கீவளூரின் தெற்கில் 7 கிமீ-ல் உள்ள கீழவெண்மணி விளக்கை தாண்டியதும் மோகனூர் செல்லும் சாலை பிரிகிறது அதில் இரண்டு கிமீ சென்றால் அணக்குடி கிராம பிரிவு சாலை வருகிறது. அலவன் என்றால் சந்திரன் சந்திரன் பூஜித்த தலம் என்பதால் அலவன்குடி ஆகி அணக்குடி ஆகியிருக்கலாம். சிறிய கிராமம் இரு தெருக்களே உள்ளன. ஊரின் வடகிழக்கில் சிவன்கோயில் மற்றும் பெருமாள் கோயில் தனித்து உள்ளன. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் கோயிலின் முன்னும் பின்னும் பெரிய குளங்கள் உள்ளன. கோயிலை சுற்றி நிறைய மரங்கள் அடர்ந்து உளளன. ஒரு அரசின் கீழ் நாகர் சிலை மாடத்தில் உள்ளது.
கோயில் அழகிய சோழ கட்டுமானமாக உள்ளது ஆனால் முற்றிலும் செங்கல் தளியாக உள்ளது. சந்திரன் வழிபட்டதால் இறைவன் சோமநாதர் எனவும் அம்பிகை சோமசுந்தரி எனவும் அழைக்கப்படுகின்றனர். கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார் இறைவன் சற்று பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அவரின் இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை உள்ளது. இறைவன் எதிரில் நந்திக்கும் பெரியதொரு சிற்றாலயமாக மண்டபம் கட்டப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதன் பின்புறம் ஒரு பலிபீடம் உள்ளது.
கருவறை கோட்டமாக தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர் தனித்த சிற்றாலயத்தில் மேற்கு நோக்கி உள்ளார். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையினை வைத்துதான் ஒருவர் பிறந்த ராசி தீர்மானிக்கப்படுகிறது. இதனால் பௌர்ணமி நாட்களில் சந்திரன் வழிபாடும், அவர் வழிபட்ட தலங்களில் வழிபாடு செய்வதும் சந்திர தோஷம் தீர வழிவகை செய்யும். கோயில் அருகிலேயே குருக்கள் வீடு உள்ளதால் உங்களுக்கு தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அனக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி