மாடாகுடி ஆத்மநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
மாடாகுடி ஆத்மநாதர் சிவன்கோயில், மாடாகுடி, கும்பகோணம் – வலங்கைமான் சாலை, தஞ்சாவூர் மாவட்டம்- 612 402.
இறைவன்
இறைவன்: ஆத்மநாதர் / ஆலங்காட்டீசர்
அறிமுகம்
கும்பகோணம் – வலங்கைமான் சாலையில் திப்பிராஜபுரம் தாண்டியதும் உள்ளது மாடாகுடி கும்பகோணத்தில் இருந்து NH66 – எட்டாவது கிமி-ல் இந்த ஊர் அமைந்துள்ளது. திருமலைராஜன், முடிகொண்டான் எனும் இரு காவிரி கிளைநதிகளின் இடையில் அமைந்துள்ள பிரதேசம். கும்பகோணத்தில் இருந்து வரும்போது திருமலைராஜனை தாண்டியதும் வலதுபுறம் செல்லமாகாளி கோயில் இருக்கும் இடதுபுறம் பெரிய குளம் ஒன்றும் இருக்கும். சாலையில் இன்னும் ஒரு நூறு மீட்டர் போனால் இடது புறம் ஒரு சிறிய கான்கிரீட் தெரு ஒன்றும் அதன் முகப்பில் கோயிலுக்கான சிறிய தகர போர்டு ஒன்றும் உள்ளது. கான்கிரீட் ரோடு சிறிது தூரம் செல்கிறது. அத்துடன் இந்த குடியிருப்பு பகுதி முடிகிறது. பின்னர் அங்குள்ளோரிடம் சிவன்கோயில் வழி கேட்டால் சிறிய ஒற்றையடி பாதையினை காட்டுகின்றனர். வளைந்து நெளிந்து தாண்டி குனிந்து என சிலபல சிரமங்களுடன் வயல் வாய்க்கால் கருவைக்காடு சுடுகாடு என தாண்டியதும் மிக பிரம்மாண்டமாக நூற்றுக்கால் மரமொன்று அரை ஏக்கர் பரப்பின் மேல் குடை பிடித்து நிற்கிறது, அந்த ஆலமரத்தின் கீழ் கிழக்கு நோக்கிய எம்பெருமானாக உள்ளார் இறைவன். திருக்கூட்டத்தினர் கொடுத்த நீல தகரக்கொட்டகையுள் மைந்தன் வினாயகனுடனும் எதிரில் நந்தியுடனும் அமைதியாய் வீற்றிருக்கிறார். பெரிய அழகிய பாணமும் ஆவுடையாரும் கொண்டு கம்பீரமாக நமக்கு நம்பிக்கையளிப்பவராக காட்சியளிக்கிறார். பல காலம் வயலோரம் இருந்த இவர் ஆலத்தின் கீழ் அமர்ந்ததால் நாம் இவரை ஆலங்காட்டீசர் என்றே அழைப்போம். இதுபோன்ற மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கோயில்களில் இருக்கும் இறைவனை நேரில் தரிசித்தல் அபரிமிதமான ஆற்றல்களை நமக்களிக்கும் என்பதில் ஐயமில்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாடாகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி