தென்ஓடாச்சேரி சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/311485481_8152288904844148_423820066059397453_n.jpg)
முகவரி :
தென்ஓடாச்சேரி சிவன்கோயில்,
தென்ஓடாச்சேரி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சூரனூரின் தெற்கில் 5 கிமி தூரத்தில் உள்ளது இந்த கிராமம். வெட்டாறின் வடகரையில் அமைந்துள்ளது தான் ஓடாச்சேரி அதனால் ஓடைக்கரை சேரி என்று இருந்து இன்று ஓடாச்சேரி என மருவி இருக்கலாம். இந்த வெட்டாற்றை தாண்டினால் தென்ஓடாச்சேரி பாலம் தாண்டியவுடன் வலதுபுறமாக கல்லிகுடி நோக்கி செல்லும் சாலையில் வலதுபுறம் ஓடைக்கரையில் கிழக்கு நோக்கிய ஒரு தகரகொட்டகை கோயிலில் இருக்கிறார் எம்பெருமான். இடதுபுறம் ஒரு பெரிய ஐயனார் கோயில் ஒன்றும் உள்ளது. கிழக்கு நோக்கிய சிறு கோயில் இறைவன் சதுரபீடம் கொண்ட ஆவுடையாரில் உள்ளார், அருகில் சின்ன விநாயகர், சற்று முன்புறத்தில் தெற்கு நோக்கிய ஒரு மாடத்தில் அம்பிகை. உள்ளார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/309248802_8152288794844159_1468652413742600479_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/311132914_8152288758177496_2449022079982953336_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/311485481_8152288904844148_423820066059397453_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்ஓடாச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி