தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், மகாராஷ்டிரா
முகவரி
தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், உஸ்மனாபாத், மகாராஷ்டிரா – 413501
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
தாராசிவா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மனாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும். தாராசிவா குகைகள் மகாராஷ்டிரா மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாரசிவா குகைக் குடைவரைகள் கிபி 5 – 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் இராஷ்டிரகூடர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. இக்குகை குடைவரைகள் முதலில் பௌத்தர்களால் நிறுவப்பட்டு பின்னர் சில குகைகள் சமணர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
ஏழு தாராசிவா குகைகளில், குகை எண் ஒன்றின் குடைவரை 20 கற்தூண்களைக் கொண்டது. குகை எண் 2, எல்லோரா, அஜந்தா குகைகள் போன்று வாகாடக மன்னர்களால் வடிக்கப்பட்டது. 80 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட இதன் மைய மண்டபத்தில் பிக்குகள் தங்குவதற்கான 14 அறைகளும், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கௌதம புத்தரின் சிலையும் உள்ளது. 3வது குகை, முதல் குகை போன்றுள்ளது. பிற நான்கு குகைகள் சமணர்களுக்கானது. தாராசிவா குகைகளை பௌத்தர்களும், சமணர்களும் தம்முடையது எனக் கொண்டாடுகின்றனர். மகாராட்டிரா மாநிலத்தின் 1200 குகைகளை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் ஜேம்ஸ் பர்கூசன் என்பவரி கூற்றின் படி, தாராசிவா குகைகள் முதலின் பௌத்தர்களால் நிறுவப்பட்டது என்றும், பின்னர் 12ம் நூற்றாண்டில் அதில் சில குகைகள் சமணக் குகையாக மாற்றம் செய்யப்பட்டது என்பர்.
காலம்
5 – 7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உஸ்மானாபாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உஸ்மானாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
உஸ்மானாபாத்