Wednesday Nov 20, 2024

சியோத் புத்த குடைவரைக் கோவில் (கதேஷ்வரர் கோயில்), குஜராத்

முகவரி

சியோத் புத்த குடைவரைக் கோவில் (கதேஷ்வரர் கோயில்), சியோத், லக்பத் தாலுக்கா கட்ச் மாவட்டம், குஜராத்

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

சியோத் புத்த குடைவரைக் குகைகள் இதனை கதேஷ்வரர் பௌத்த குகைகள் என்றும் அழைப்பர். இவைகள் ஐந்து பௌத்த குடைவரைக் குகைளின் தொகுதியாகும். இக்குகைகள் குஜராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், லக்பத் தாலுக்காவின் சியோத் கிராமத்தில் உள்ளது. கட்சிலிருந்து 110 கிமீ தொலைவிலும், புஜில் இருந்து 148 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சியோத் குகைகள் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால குடைவரைக்கோவில்.

புராண முக்கியத்துவம்

இதன் முதன்மைக் குகையில் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சிவன் சன்னதி அமைந்துள்ளது. பின்னர் இக்குடைவரை குகைகளை பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். இக்குகையில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது. பிற நான்கு குகைகள் ஒற்றை அறைகளுடன் உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில், சிந்து ஆற்றின் கழிமுகத்தில் இருந்த எண்பது குகைகளின் ஒரு தொகுப்பாக சியோத் குகைகள் இருந்ததாக சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் கருதுகிறார். சியோத் கிராமத்தில் 1988-1989ல் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், கௌதம புத்தர் உருவம் பொறித்த களிமண் சிலைகளும், பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் செப்பு மோதிரங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நந்தி உருவங்கள், மணிகள், சங்கிலிகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது. அகழ்வாய்வின் படி, இப்பகுதியை சைவர்களிடமிருந்து பௌத்தர்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் மீண்டும் சைவர்களால் இக்குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் தொன்மையான படிகளுடன் கூடிய கிணறு இக்குகைகளின் அருகே உள்ளது.

காலம்

1 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சியோத்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புஜ்

அருகிலுள்ள விமான நிலையம்

புஜ்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top