குறிச்சி தீர்த்தகிரீஸ்வரர் சிவன் கோயில், சேலம்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/கறசச-தரததகரஸவரர-சவன-கயல-சலம.jpg)
முகவரி
குறிச்சி தீர்த்தகிரீஸ்வரர் சிவன் கோயில், குறிச்சி, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் – 636104.
இறைவன்
இறைவன்: தீர்த்தகிரீஸ்வரர்
அறிமுகம்
வாழப்பாடியை அடுத்த பேளூர் குறிச்சி கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள சிறு பழங்கற்றளி இந்த தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். கோயிலை அடைய ஊருக்கும் கோயிலுக்கும் இடையே வசிஷ்ட நதியைக்கடக்க வேண்டும். இச்சிறு கற்றளி காலம் சிதைத்தவை போக கருவறையுடன் சிறு முன் மண்டபத்துடனும் மட்டுமே எஞ்சியுள்ளது. கோட்டங்கள் யாவும் சிற்பங்களற்று வெறுமையாய் இருக்கின்றன. வடபுரம் செழித்து நெடிந்து வளர்ந்திருக்கும் வேம்பு சுற்றிலும் தண்ணிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு முன்னால் சிறு பந்தலும் தரையும் போடப்பட்டுள்ளது. கருவறைக்குள்ளே தீர்த்தகிரிஸ்வரர் அழகுடன் காட்சியளிக்கிறார். அவருக்கெதிரே நந்தி அமைந்துள்ளது. சிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி, சேலம்
![LightupTemple lightup](http://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)