காகம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/347819098_1445214739632806_1717038210098257930_n.jpg)
முகவரி :
காகம் கைலாசநாதர் சிவன்கோயில்,
காகம், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610201.
இறைவன்:
கைலாசநாதர்
அறிமுகம்:
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் பதினெட்டாவது கிமீ-ல் உள்ள கச்சனம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலதுபுறம் அரை கிமீ சென்றால் இந்த காகம் கிராமம் அடையலாம். ஊரின் பெயர் காரணம் தெரியவில்லை. எனினும் காகம் ஒன்று அவினாசியில் நிவேதன சோற்று உருண்டையை எடுத்து செல்லும்போது அதில் ஒரு பருக்கை சிவனடியார் திருவோட்டில் விழுந்தது, அதனை அவர் தன் உணவுடன் சேர்த்து உண்டதால் அவருக்கு மோட்சம் கிட்டியது இதனை அறியாமல் செய்த காக்கைக்கு தீர்க்கத்துண்டன் எனும் பெயருடன் சிவகணமாக பதவியும் கிட்டியது. அதே போல் இத்தலம் காகம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் ஒரு சிவகணம் வழிபட்ட இறைவனை நாமும் வழிபட்ட பெரும்பேறும் கிடைக்கும்.
ஊரின் வடக்கில் பெரிய குளத்தின் கரையில் ஒரு லிங்க மூர்த்தி மட்டும் கிடைத்தார், பழமையான நந்தி உடைந்து கிடக்கிறது, கைலாசநாதர் என பெயர் சொல்கிறார்கள்; பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். பெரிய ஆலமரத்தடியில் ஒரு தகர கொட்டகையில் கோயில் எழுப்பி உள்ளனர். அவருக்குஎதிரில் நந்தி மற்றும் சிறிய விநாயகர் பாலமுருகன் சில பரிவார மூர்த்திகள் சேர்த்து இந்த இறைவனை ஒரு பூசகர் ஒருவர் பூஜை செய்கிறார். தனியாக ஒரு நீண்ட கொட்டகை போட்டு அதில் குறி சொல்லும் நபராகவும் உள்ளார். இறைவன் – கைலாசநாதர்
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/05/347608633_2346810708832137_3502313187343544740_n.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/05/347620241_762628558883900_2683092010603656107_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/05/347819098_1445214739632806_1717038210098257930_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கச்சனம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி