Sunday Dec 22, 2024

அருள்மிகு தென் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு தென் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில், அன்னையூர் ரோடு, ஏழு செம்பொன், விழுப்புரம் மாவட்டம் – 605 203.

இறைவன்

இறைவன்: தென் திருக்காளத்தீஸ்வரர் இறைவி: ஞானசுந்தரி அம்பாள்

அறிமுகம்

விழுப்புரம் – திருவண்ணாமலை பெருவழியில் உள்ள சூரப்பட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் எழுச்செம்பொன் ஊர் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர் ஏழிசைமோகன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. எழுச்செம்பொன் என்றால் எழு செப்பு உலோகம் என்று பொருள்.

புராண முக்கியத்துவம்

கடலூரை தலைநகரமாக கொண்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் வட்டத்துப்பகுதிகளை காடவராயர் என்ற பட்டத்துடன் பல சிற்றரசர்கள் சோழர் காலத்தில் ஆட்சிப்புரிந்தனர். ஏழிசைமோகன் குலோத்துங்க காடவராயன், ஏழிசைமோகனானான ஜனநாதகச்சிராயன், ஏழிசைமோகன் மணவாளப்பெருமாள், கூடல் ஏழிசைமோகன், ஆளப்பிறந்தான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வம்சத்தில் தோன்றியவனும் சோழமன்னன் மூன்றாம் இராசராசனை எதிர்த்து சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு சுதந்திரமான மன்னனாகி தொண்டை மண்டலம் முழுவதையும் வென்று, ஆட்சி செய்த கோப்பெரும்சிங்கன் என்பவரே வலிமை மிக்க மன்னரானார். இவர் 1242 முதல் 1279 வரை ஆட்சி செய்தார். இவருடைய பட்டப்பெயர்களில் முக்கியமானது ஏழிசைமோகன் அழகியசீயான் என்பது ஆகும். இவருடைய பெயரால் ஏழிசைமோகன் ஊர் ஏற்பட்டு காலபோக்கில் மழுவி எழுசெம்பொன் என மறுவிவிட்டது. இவ்வூர் சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகளும், பெருமாள்கோயிலில் ஏழு கல்வெட்டுகளும் எழுதப்பெற்றுள்ளன. இவற்றில் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் மூன்று. விசயநகர மன்னர் காலத்தவை நான்கு. பெயர் குறிப்பிடாத பிற்கால கல்வெட்டுகள் மூன்று ஆகும். இவற்றில் மிகப்பழமையான கல்வெட்டு மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடையது. இவர் கி.பி 1303 முதல் 1322 வரை ஆட்சிபுரிந்தார். இவருடைய 13வது ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1316 ) இக்கோயில்களில் இருப்பதால் இவருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பெற்றன எனலாம். கி. பி 1340 மாற வர்மன் விக்கிரபாண்டியன், சதுர்வேதி மங்களத்தை சுவாமிக்கு தானமாக கொடுத்து உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டி வழிபாடு செய்து வந்தார். இத்திருத்தலத்திற்கு, ஆலய பணி செய்வோருக்கு உடல்நலம் ஆரோக்கியம் தரும் என்பது இறைவாக்கு. இத்திருத்தலத்திற்கு, திங்கள் தோறும், ஐந்து வாரம், ஆலய தரிசனம் செய்வோருக்கு ,உடல்நலம் குழந்தை பாக்கியம், கடன் நிவர்த்தி, திருமண தடை நீங்க அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது கல்வெட்டில் உள்ள இறைவாக்கு. இத்தகைய சிறப்பு மிக்க கோயில் கி.பி. 1463 ஒரிசா நாட்டு மன்னன் குமாரஹம் வீரர் என்பவர் இப்பகுதி மீது படையெடுத்து பொழுது, அழிக்கப்பட்டது. இப்படையெடுப்பை ஒட்டியன்கலகம் என்று கல்வெட்டு கூறுகிறது. ஆனால் விரைவிலேயே விஜயநகர மன்னர் மில்லகார்ஜூனராயர் என்பவரின் தளபதி சாளுவ நரசிங்கர் என்பவர் 1464ல் ஒரிசா மன்னரை விரட்டிவிட்டு இப்பகுதிகளை மீட்டார். கிருஷ்ணதேவரையர் கி.பி 1518ல் நாவிலங்காதாள்பட்டு என்ற ஊரை சிவன்கோயிலுக்கு கொடுத்தார். இவ்வாறு கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் தோன்றிய ஊரில் பாண்டியர் காலத்தில் கட்டப்பெற்று, ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு, விஜயநகரமன்னனால் மீண்டும் புதுப்பித்துக்கட்டப்பட்ட திருக்கோயில் பல வருடங்களாக சரியான வழிபாடின்றி, இடிந்த நிலையில், திருப்பணிகள் தொடங்கப்பட்டு பழைய படி கருங்கற்களால் ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. கோபுர வேலைகள் நடந்து வருகிறது.

சிறப்பு அம்சங்கள்

இத்திருத்தலத்திற்கு, ஆலய பணி செய்வோருக்கு உடல்நலம் ஆரோக்கியம் தரும் என்பது இறைவாக்கு. இத்திருத்தலத்திற்கு, திங்கள் தோறும், ஐந்து வாரம், ஆலய தரிசனம் செய்வோருக்கு ,உடல்நலம் குழந்தை பாக்கியம், கடன் நிவர்த்தி, திருமண தடை நீங்க அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது கல்வெட்டில் உள்ள இறைவாக்கு.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அன்னையூர் ரோடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிசேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top