Friday Dec 27, 2024

ஸ்ரீ கைலாசநாதன் சுவாமி கோவில், இலங்கை

முகவரி

ஸ்ரீ கைலாசநாதன் சுவாமி கோவில், ஸ்ரீ முருகன் செயின்ட், கொழும்பு 00200, இலங்கை

இறைவன்

இறைவன்: சிவன், கணேசன்

அறிமுகம்

கப்பித்தாவத்தை கைலாசநாதர் சுவாமி கோயில் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான மருதானையில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கிறது. இவ்வாலயம் வரலாற்றுப் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வசித்து வணிகத்தில் ஈடுபட்ட திருவிளங்க நகரத்தார் என்ற அழைக்கப்படும் வணிக வைசியச் செட்டியார்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது. அக்காலத்தில் இக்கோயில் முற்றிலும் நீரினால் சூழப்பட்டு இயற்கைச் சூழலில் இந்திய ஆலயங்களை ஒத்ததாகவும் அமையப் பெற்றிருந்தது. புராதன சிவன் கோயிலின் சிவ சின்னங்களையும் சிவனின் சந்நிதி, அம்மன் சந்நிதி ஆகியவற்றின் அடித்தளத்தில் பழைமை வாய்ந்த கருங்கற்களையும் இங்கு காணக் கூடியதாக உள்ளது. அம்மன் சந்நிதியில் உள்ள கோமுகியும் பழைய ஆலயத்தின் சின்னமாகத் தெரிகிறது.

புராண முக்கியத்துவம்

இலங்கையில் ஒல்லாந்தர்களுடைய ஆட்சியில் அந்நிய வாணிய செட்டியார் இங்கு வந்த சேர்ந்தனர். டச்சுக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களில் காலூன்றிக்கொண்டு தமது வணிகத்தைக் கவனித்து வந்தனர். கொழும்பு கப்பித்தாவத்தையிலுள்ள “கில்மபூதத்தை” அல்லது “கதுறுகாவத்தை” என்ற இடத்தில் வந்திறங்கிய வணிகர்கள் அதனைத் தங்கள் வணிக மையமாகக் கொண்டார்கள். இங்கு தான் கருவாப்பட்டை, மிளகு, கொப்பரா, தேங்காய், எண்ணெய், கயிறு முதலியவைகளின் பண்டகசாலைகள் இருந்தன. ஓல்லாந்த வியாபாரிகள் கருவாப்பட்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். அவ்விடம் இருந்த பண்டகசாலைகள் ஒல்லாந்தரால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியால் பார்வையிடப்பட்டன. திருவிளங்க நகரத்தார் என்ற வாணிய செட்டிமார் இங்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் இவ்விடத்தில் மேற்பார்வையாளராக இருந்த ஒல்லாந்த அதிகாரியைக் “கேப்டன்” என்ற அழைத்தார்கள். அவரின் நிர்வாகத்தில் இருந்த இடம் முழுவதையும் “கேப்டன் கார்டன்ஸ்” என்ற பெயரிட்டார்கள். அதுவே இன்று கப்பித்தாவத்தை எனப்படுகிறது. இங்கு வணிகம் செய்துவந்த வணிக வைசியச் செட்டியார்கள். அவர்களிருந்த தோட்டத்தில் மாலை வேளைகளில் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தின் கீழ் பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். கொழும்பு மாநகரில் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செட்டியார்களிடமிருந்து கோயிலுக்காக நன்கொடை பெற்று 1783 ஆம் ஆண்டில் வீரபத்திரன் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் சிவன் கோயிலைக் கட்ட அத்திவாரமிடப்பட்டது. வீரப்பத்திரன் செட்டியாரே சிவாலயம் கட்ட நிதி திரட்டும் பொறுப்பும் ஏற்று அக்கோயிலைக் கட்டும் திருப்பணியையும் ஏற்றுக்கொண்டார். அச்சிவன் கோயிலே இன்று ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சைவ விதிப்படி குடமுழுக்கு முதலியன செய்யப்பட்டது. 1828ல் வீரபத்திரன் செட்டியார் காலமானார். அவர் சகோதரனின் மகன் சிதம்பரம் ராமையா செட்டியார் ஆலய நிருவாகத்தை நடத்தி வந்தார். வைசியச் செட்டியார்களிடம் நன்கொடை பெற்று அப்பணத்தைக்கொண்டு ஆலயத்துக்கு பக்கத்து நிலங்களையும் வேறு இடங்களில் தென்னந் தோட்டம் முதலியவற்றையும் வாங்கினார். அங்கே முன் இருந்த மலையாள மொழிபெயர்ப்பாளரின் வம்சாவழியினரின் காணிக்களையும் ஆலயத்துக்காக பொருள் கொடுத்து வாங்கினார்.

திருவிழாக்கள்

சிவன் திருவிழா ஆவணி மாதத்தில் 21 நாட்கள் இடம்பெறுகின்றது. அம்மன் திருவிழா மாசி மாதத்தில் 10 நாட்கள் இடம்பெறுகின்றது. கண்ணகி அம்மன் திருவிழா வைகாசி மாதத்தில் 10 நாட்கள் இடம்பெறுகின்றது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோட்டை நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

கொழும்பு

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top