சேந்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/163446658_5214277425311992_5643701362994594051_n.jpg)
முகவரி :
சேந்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
சேந்தங்குடி, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
கல்யாணி
அறிமுகம்:
மயிலாடுதுறையின் வடகிழக்கு பகுதியானது சேந்தங்குடி முப்பது ஆண்டுகளின் முன்னர் வரை சேந்தங்குடி தனி கிராமம் தான். இங்கு ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலை தன் இருப்பிடமாக கொண்டு இறைவன் கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். கோயிலின் முகப்பில் உள்ள இறைவன் இறைவி சுதை சிற்பத்தின் பிம்பம் குளத்து நீரில் ஆடிக்கொண்டிருப்பதை காண ஆனந்தமாக இருக்கிறது. இறைவன் கைலாசநாதர் இறைவி கல்யாணி இவர் இறைவன் சன்னதியின் உள்ளேயே உள்ளார். இறைவன் சன்னதி வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் இருவரும் உள்ளனர். சுதையாலான துவார பாலகர்கள் உள்ளனர். எதிரில் அழகான நந்தி தேவர் உள்ளார்.
தென்கிழக்கில் ஒரு கிணறு உள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை உள்ளனர். சண்டேசர் உள்ளார். தென்மேற்கில் செல்வகணபதி எனும் விநாயகர் உள்ளார். வடமேற்கில் செழித்தோங்கிய ஒரு வில்வமரமும், அதனடியில் நான்கு நாகர்களும் உள்ளனர். அருகில் ஒரு மாடத்தில் காஞ்சி பெரியவர் ? சுதைசிற்பம் உள்ளது. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளனர். வரலாற்றில் பல சேந்தன்கள் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். அம்பர் சேந்தன் என்பவர் , பூந்தோட்டம் அருகில் உள்ள அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். திவாகர நிகண்டு பாடிய திவாகர முனிவருக்கு இன்னமுது ஊட்டியவன். இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டும் அவரது பெயரால் வழங்கும் ஊராக இருக்கலாம். கைலாசநாதர் என்பது சோழர்களின் உரிமைக்கோயிலாக இருந்திருக்கும், இந்த சேந்தங்குடிக்கான கதை தெரியவில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/162195790_5214280708644997_2061504391587147092_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/163446658_5214277425311992_5643701362994594051_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/163550939_5214277461978655_6074175913662714330_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/163941273_5214280428645025_5967631582563576400_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/164003248_5214280918644976_7474536555584183124_n-683x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/164744056_5214277391978662_6193638137076146661_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/164878894_5214280325311702_3890516607440259687_n-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/165062962_5214280368645031_4675184397186453152_n-1024x683.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேந்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி