செங்காட்டூர் மருதேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
செங்காட்டூர் மருதேரி சிவன்கோயில், செங்காட்டூர் மருதேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த செங்காட்டூர் கிராமம். செங்காட்டூர் மருதேரி கிராமத்தில் சிவன் கோயில் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோயில் உள்ளேயும் வெளியும் மரங்கள் முட்செடிகள் மண்டிக்கிடக்கின்றன. செடிகளுக்கு இடையில் நந்தி சிலை மட்டும் காணப் படுகிறது. பல சிலைகள் மண்ணில் புதைந்து உள்ளதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கோயில் பின்புறம் ஒரு குளம் காணப்படுகிறது. தொடர்புக்கு திரு ஆறுமுகம்-9843752254, திரு ஏழுமலை-9751087231, திரு சிவா-9787066694. இந்த ஊர் செய்யூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்காட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை