Sunday Dec 22, 2024

குன்றக்குடி குடைவரை சிவன் கோவில், சிவகங்கை

முகவரி

குன்றக்குடி குடைவரை சிவன் கோவில் (மசிலீச்சுரம் – சண்முகநாதர் கோவில்), குன்றக்குடி, திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம் – 630206

இறைவன்

இறைவன்: மசிலீச்சுரம் – சண்முகநாதர்

அறிமுகம்

குன்றக்குடி குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இதில் பாறையில் வெட்டப்பட்ட மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் என்பதால் குன்றக்குடி என பெயர் பெற்றுள்ளது. தேனாற்று நீர் பாயும் ஊர்களில் குன்றக்குடியும் ஒன்றாதலால் இங்குள்ள இறைவன் அப்பெயர் பெற்றார் எனலாம். காலம் போன போக்கில் குன்னக்குடி என மருவியது. குன்றக்குடி முருகன் கோவிலுக்கு வருபவர்கள் கூட அதன் கீழே உள்ள குடைவரை கோவிலை பார்த்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். முருகன் மலைக்கோவிலின் தென்மேற்கு அடிவாரத்துல மசிலீச்சுரம் என்று பாண்டிய மன்னனின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள பெயரினை இன்றளவும் தாங்கி நிற்கும் இந்த குடைவரை கோவில். மசிலீச்சுரம் – மயில் + மலை + ஈச்சுரம் என பொருள்படுது. இதன் காலம் கல்வெட்டுகளில் காணப்படும் வட்டெழுத்தின் காலத்தை கொண்டே ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததென அறியமுடியுது. கோவிலின் தூண்களிலும் தாழ்வாரத்திலும் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளையும் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளையும் பறைசாற்றி நிற்கிறது ஓர் அழகிய குடைவரைகளின் சிறு தொகுப்பு.

புராண முக்கியத்துவம்

இதற்கு முன் பதினைந்தாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் அமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றும் இருக்கிறது. அதற்கடுத்தாற் போல வரிசையா நான்கு குடைவரை கோவில்கள் உள்ளன. ஒன்று மட்டும் தனியாகவும் மற்ற மூன்றும் ஒன்று சேர்ந்தும் இருக்குகிறது. குடைவரை கோவில்களின் பெயர்களாவன, 1)சுந்தரேசுவரர், 2)அண்ணாமலையார், 3)மலைக்கொழுந்துநாதர், 4)சண்டேசுவரர். குடைவரை கோவில் என்றாலே சிவலிங்கங்கள், தூண்கள், கருவறைகள், புடைப்புச் சிற்பங்கள் மலையில் குடைந்து செதுக்கப்பட்டவையாக தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இங்கு மொத்தம் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. முதல் இரண்டு குடைவரைகளின் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்கமே. தேனாற்றுநாதர் எனப்படும் சிவலிங்கம் அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட சுயம்பு மூர்த்தியாக உள்ளது. மூன்றாம் குடைவரை கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் மிக அருமையா செதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்குற புடைப்புச் சிற்பங்களான முருகன், இரண்டு துவாரபாலகர்கள், திருமால், கருடாழ்வார், நான்முகன், மூன்று சிவலிங்கங்கள், ஆடல் வல்லான்,வலம்புரி விநாயகர் ஆகிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் ஆகும். ஆனால் இக்கோவிலை யாரும் கவனிப்பதாக தெரிவதில்லை. மேலே உள்ள முருகன் கோவிலிக்கு இருக்கும் மரியாதைக்கூட இக்கோவிலுக்கு இல்லை. ஒருவேளை பூஜை நடப்பதே மிகவும் சிரமம். கால வெள்ளத்தினால் அழிந்து எஞ்சியிருக்கும் இக்கோவிலை பக்தர்கள் யாரும் கவனிப்பதாக தெரிவதில்லை.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top