Monday Dec 23, 2024

வழிவிடும் முருகன் திருக்கோயில், திருச்சி

முகவரி :

வழிவிடும் முருகன் திருக்கோயில்,

பாரதியார் சாலை, சங்கிலியாண்டபுரம்,

திருச்சிராப்பள்ளி,

தமிழ்நாடு 620001

இறைவன்:

வழிவிடும் முருகன்

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், திருச்சி ரயில் நிலையத்தை எதிர்கொள்ளும் ரவுண்டானா பகுதியில் வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வழிவிடு முருகன் என்று அழைக்கப்படுகிறார். இந்த முருகனுக்கு வழிவிடு முருகன் என்று பெயர் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இது நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. இக்கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 500-1000 ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலாக கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

தற்போது கோயில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இத்ந முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.

நம்பிக்கைகள்:

சொத்துக்காக சண்டையிட்டு, கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்குவந்து வழிபட்டால் சமாதானமாக போகவும், இருவரும் வாழவும் வழி பிறக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

 பொதுவாக கோயில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோயிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.

பாவம் போக்கும் சாயா மரம்: கோயிலின் உள்ளே “சாயா’ என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. சனிபகவானின் தாயார் பெயர் சாயா. இந்த மரத்தை சாயாதேவியின் அம்சமாக இப்பகுதி மக்கள் பூஜை செய்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சனி பகவான் தங்களது துன்பங்களை குறைப்பதாக ஐதீகம். இந்த மரம் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலிலும் உள்ளது.

திருவிழாக்கள்:

பங்குனி உத்திரம், மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. தை பூசம் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். வேண்டுதலை நிறைவேற்றிய முருகப்பெருமானுக்கு பால்குடம் ஏற்றி, காவடி எடுத்தும், பால்குடம் ஏற்றி வழிபடுகின்றனர்.

காலம்

500-100 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top