Monday Dec 23, 2024

நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

முகவரி

நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், நென்மேலி, செங்கல்பட்டு அருகே, காஞ்சிபுரம் மாவட்டம்- 603003.

இறைவன்

இறைவன்: ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் வழங்கப்படுகிறது. இங்கு பிள்ளை இல்லாத தம்பதியருக்கு பெருமாளே பிள்ளையாக இருந்து ஈம காரியங்களைச் செய்து பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதனால் பித்ரு தோஷம் போக்கும் தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

இந்தக் கோயிலில், ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதி, இந்தப் பெருமாளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை எனும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமாளே செய்ததாகச் சொல்கிறது இந்தத் தலத்தின் சரிதம்! அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாதவருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

நம்பிக்கைகள்

பக்தர்களின் முன்னோர்களுக்காக விரதமிருந்து சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்வார் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

குதப காலம் எனும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்! எனவே, இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம்! இந்த ஸ்வாமிக்கு வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நென்மேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top