தாராசிவா மகாதேவர் கோவில், மகாராஷ்டிரா
முகவரி
தாராசிவா மகாதேவர் கோவில் தாராசிவா குகைகள் சாலை, அம்பேஹோல், தாராசிவா, உஸ்மானாபாத், மகாராஷ்டிரா – 413501
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தாராசிவா கோவில் பாலகாட் மலைகளில் உஸ்மானாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு மற்றும் தொல்லியல் துறையால் தாராசிவா கோவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாராசிவா குகைகள் மற்றும் மகாதேவர் கோவில் ஆகியவை 5-7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவில் அருகில் தாராசிவா புத்த குகை உள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெளத்தம், சிவன் மற்றும் சமண உட்பட மொத்தம் 11 குகைகள் இந்த பகுதியில் உள்ளதால் தாராசிவா குகைகள் பிரபலமாக உள்ளன. குகைகளின் வரலாற்று ஆய்வின்படி அவை கிமு 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன.
காலம்
5 – 7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உஸ்மானாபாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உஸ்மானாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
உஸ்மானாபாத்