சின்ன வடவாடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/199756081_5634464053293325_331816864182812313_n.jpg)
முகவரி :
சின்ன வடவாடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில்,
சின்ன வடவாடி, விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டடம் – 606003.
இறைவன்:
அருணாசலேஸ்வரர்
அறிமுகம்:
விருத்தாசலத்தின் வடக்கில் செல்லும் உளுந்தூர்பேட்டை சாலையில் ஐந்தாவது கிமீ-ல் உள்ளது பெரியவடவாடி இந்த ஊருக்கு சற்று முன்னதாக வடவாடி ஏரியை ஒட்டி இடதுபுறம் பிரியும் சிறிய சாலையில் இரண்டு கிமீ சென்றால் வருவது சின்ன வடவாடி கிராமம், இங்குள்ள தொடக்கப்பள்ளியின் நேர் பின்புறத்தில் ஒரு பெரிய வயல் நடுவில் உள்ளது இந்த சிவன் கோயில். வடவாடி ஏரியின் மேற்கு கரை தான் இந்த கிராமம், அருகில் உள்ள விருத்த -அசலம் போல் இந்த இறைவன் அருண அசலம் எனும் அருணாசலேஸ்வரர்.
கிழக்கு நோக்கி பல காலம் வெட்டவெளியில் இருந்தவருக்கு அன்பர்கள் ஒன்று சேர்ந்து அழகிய பெரிய கொட்டகை ஒன்றை கட்டியுள்ளனர். இறைவன் அழகான லிங்க திருமேனியனாக கிழக்கு நோக்கியுள்ளார், எதிரில் நந்தி, பலிபீடம் தென்மேற்கில் விநாயகனும், வடமேற்கு மூலையில் சுப்ரமணியரும், வடகிழக்கில் நவக்கிரக தொகுப்பும் உள்ளன. சன்னதி முழுதும் வண்ண தட்டோடுகள் பதித்து அழகு செய்துள்ளனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/194656658_5634464023293328_2579467317811809031_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/198693072_5634463809960016_1363489697899052485_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/199056293_5634463456626718_3490120963888743412_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/199756081_5634464053293325_331816864182812313_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/200734156_5634463756626688_5600805561077553237_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்ன வடவாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி