Monday Dec 23, 2024

சளுக்கை ஆதிநாதர் சமணக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

சளுக்கை ஆதிநாதர் சமணக்கோயில்,

சளுக்கை, வந்தவாசி தாலுகா,

திருவண்ணாமலை மாவட்டம் – 604408.

தொடர்புக்கு: ஸ்ரீசெல்வராசு – +919894568176

இறைவன்:

ஆதிநாதர்

அறிமுகம்:

 சளுக்கை என்னும் கிராமம் காஞ்சிபுரம் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த ஸ்தலம் கி.பி.11ம் நூற்றாண்டில் வீரகேரளபெரும் பள்ளி என்ற பெயருடன் ஒரு ஜிநாலயம் இருந்ததாக அருகில் உள்ள ஆலயக் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சளுக்கி என்ற சளுக்கை சோழ ஆட்சிக் காலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

புராண முக்கியத்துவம் :

      பழைய ஆலய கருவறையின் அஸ்திவாரத்தின் மேல் புதிய ஜிநாலய கருவறை கட்டப்பட்டதுடன் முன்னால் ஒரு வழிபாட்டு மண்டபத்துடன் காட்சி தருகிறது. கிழக்கு நோக்கிய ஆலய வளாகம் வடக்கு நோக்கிய வாயில், தங்கும் விடுதியுடன் அமைந்துள்ளது. ஆலய கருவறையில் 5 அடி உயரமுள்ள கருங்கல் சிலை (அபிஷேக அரிமாணங்களுடன்) வேதிகையில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழைய மூலவர் சிலைகள் இரண்டு (லாஞ்சனம் இன்றி) ஆலயத்தின் பின்புறம் உள்ள சிறுகூரையுடன் திருச்சுற்றில் உள்ளது.

அதன்மேல் புறம் சிறிய அழகிய ஏகதள விமானம் பத்மம் கலசத்துடன் காட்சி தருகிறது. மேலும் கிரீவ சுற்றில் நாசி க்கு அடியில் அமர்ந்த நிலையில் ஜிநர் சிலைகள் நான்கு திசைகளிலும் அலங்கரிக்கின்றன. சில உலோகத்தினால் ஆன தீர்த்தங்கரர், 24 ஜிநர்களின் தொகுப்பு, சிறிய அஷ்டமங்கல வடிவங்கள் போன்றவை மூலவரின் முன்பு உள்ள தின பூஜை மேடையில் உள்ளன. அவ்வேதிப் பகுதியின் வாயில் இரும்புக் கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்திராவிட்டாலும் தினபூஜை மற்றும் மத சடங்குகள் அனைத்தும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சளுக்கை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை, திருவண்ணாமலை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top