Monday Dec 23, 2024

காட்டுபிள்ளையார் கோயில் ஆதீஸ்வரர், காஞ்சிபுரம்

முகவரி

காட்டுபிள்ளையார் கோயில் ஆதீஸ்வரர் சிவன் கோயில், வேடந்தாகல், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603314. தொடர்புக்கு திரு. தீனதயாளன்-9994007489, திரு. தண்டபாணி -9894611668.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ஆதீஸ்வரர் இறைவி : ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

அறிமுகம்

தற்போது காட்டுபிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் இவ்வாலயம், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்து வரும் மேலவலம் பேட்டையில் வேடந்தாங்கல் சாலையில் சென்று வலதுபுறம் செல்லும் காட்டு பாதையில் 1கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் இறைவன் ஸ்ரீ தியான ஆதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி. அருகிலுள்ள குளம் தூர்வாரும்போது கிடைக்கப்பட்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வாமி, அம்பாள், விநாயகர் சிலைகள் பழமையானது. முருகன், பைரவர், நந்தி, சிம்மவாகனம் மற்றும் நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீதியான ஆதீஸ்வரர் பத்ம பீடத்தில் ஓலைகொட்டகையில் காட்சிகொடுக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. பல சித்தர்கள் வந்து வழிபடுவதாக ஐதீகம். இன்றும் சித்தர்கள் வந்து போவதை கண்டதாக சொல்லப்படுகிறது. முருகன் சன்னதியில் இரண்டு சித்தர்கள் காக்கை வடிவில் காட்சிஅளிக்கின்றனர். தினமும் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷம், மற்றும் பௌர்ணமி அன்று ஏராளமானோர் இங்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். செங்கல்பட்டு மதுராந்தகம் பேருந்தில் மேலவலம்பேட்டையில் இறங்கி இங்குநடந்துவர வேண்டும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலவலம்பேட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top